கரூர் வெள்ளியணை தேவி கருமாரியம்மன் கோவில் ஆவணி உற்சவ திருவிழா தேரோட்டம்


கரூர் வெள்ளியணை தேவி கருமாரியம்மன் கோவில் ஆவணி உற்சவ திருவிழா தேரோட்டம்
x

இன்று காலை பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வந்தும், அலகு குத்தி வந்தும் அம்மனை வழிபாடு செய்தனர்.

கரூர்

கரூர் மாவட்டம் வெள்ளியணையில் பிரசித்தி பெற்ற தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் ஆவணி உற்சவ திருவிழா கடந்த மாதம் 31ஆம் தேதி கம்பம் போடுதலுடன் தொடங்கியது. பின்னர் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவில் அம்மன், அன்ன வாகனம் மற்றும் சிம்ம வாகனத்தில் புறப்பாடும் நடைபெற்றது. கடந்த 7ஆம் தேதி காப்பு கட்டுதலும் சுவாமி பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கடந்த 12 ,13, 14 ஆகிய தேதிகளில் பக்தர்கள் பால்குடம், தீர்த்த குடம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். 14-ம் தேதி ஞாயிற்றுகிழமை பூச்சொரிதல், சுவாமி அலங்காரம், திருத்தேர் அலங்காரம், எதிர் காப்பு கட்டுதல், திருக்கல்யாண உற்சவம், முத்தாளம்மன் அழைப்பு, சுவாமி குதிரை வாகனத்தில் பவனி, வாண வேடிக்கை நடைபெற்றன.

இன்று காலை பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வந்தும், அலகு குத்தி வந்தும் அம்மனை வழிபாடு செய்தனர். மாலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story