திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்த பக்தர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. திருமலை நாராணகிரி தோட்டத்தில் உள்ள 9 ஜெர்மன் செட்டுகளில் பக்தர்கள் நிரம்பினர்.
அதேபோல் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி சிலாத்தோரணம் பகுதியில் உள்ள வெளிவட்டச்சாலை வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் 24 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று முன்தினம் 83 ஆயிரத்து 576 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 31 ஆயிரத்து 173 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று அறிவிக்கப்பட்ட ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடியே 7 லட்சம் ஆகும்.
Related Tags :
Next Story






