சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு... சாமி தரிசனத்தில் புதிய கட்டுப்பாடு


சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு... சாமி தரிசனத்தில் புதிய கட்டுப்பாடு
x

18-ம் படியில் நீண்ட நேரம் நிற்காமல் உடனே தரிசனம் முடித்து திரும்ப பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. கோவிலில் கடந்த 3 நாட்களில் 2 லட்சத்து 34 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடுமையான குளிரையும், இடை இடையே கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

சபரிமலையில் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு சீசன் தொடக்கம் முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. வரலாறு காணாத வகையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் போலீசார் திணறி வருகின்றனர். மேலும் 18-ம் படியில் நீண்ட நேரம் நிற்காமல் உடனே தரிசனம் முடித்து திரும்ப பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் வருவதாலும், கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்த நிலையிலும் சாமி தரிசனத்தில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஸ்பாட் புக்கிங்கில் தினமும் 20 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்பாட் புக்கிங்கிற்காக நிலக்கல்லில் புதிதாக 7 முன்பதிவு மையங்கள் திறக்கப்பட உள்ளன. சன்னிதானத்தில் வரிசை குறைந்தால் மட்டுமே நடப்பந்தலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இனி 20 ஆயிரம் பேரும் மேல் வந்தால் மறுநாளில் தான் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களில் தினமும் 70 ஆயிரம் பேர் வழக்கம்போல் அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story