இந்த வார விசேஷங்கள்: 5-8-2025 முதல் 11-8-2025 வரை

நாளை மறுதினம் சுவாமிமலை முருகன் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை நடைபெறுகிறது.
5-ந் தேதி (செவ்வாய்)
* சர்வ ஏகாதசி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் ரத உற்சவம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ராஜாங்க சேவை.
* வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் சேஷ வாகனத்தில் புறப்பாடு.
* திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
6-ந் தேதி (புதன்)
* பிரதோஷம்.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் பொங்கல் விழா, இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் பவனி.
* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* கீழ்நோக்கு நாள்.
7-ந் தேதி (வியாழன்)
* ஆடித்தபசு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு உற்சவம், மாலை ரிஷப வாகனத்தில் பவனி.
* சுவாமிமலை முருகன் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* கீழ்நோக்கு நாள்.
8-ந் தேதி (வெள்ளி)
* வரலட்சுமி விரதம்.
* மதுரை கள்ளழகர் ரத உற்சவம்.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் ரத உற்சவம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* இருக்கன்குடி மாரியம்மன் விழா தொடக்கம்.
* மேல்நோக்கு நாள்.
9-ந் தேதி (சனி)
* பவுர்ணமி.
* மதுரை அழகர்கோவில் 18-ம் படி கருப்பண்ணசாமி சந்தனம் சாற்றுப்படி.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியாவில் பவனி.
* மேல்நோக்கு நாள்.
10-ந் தேதி (ஞாயிறு)
* இருக்கன்குடி மாரியம்மன் திருவீதி உலா.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருத்தணி முருகனுக்கு பால் அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
11-ந் தேதி (திங்கள்)
* வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் வசந்த உற்சவம்.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சப்தாவர்ணம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.