கார்த்திகை பிரம்மோற்சவ விழா 4-வது நாள்: கற்பக விருட்சம், அனுமன் வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதிஉலா


கார்த்திகை பிரம்மோற்சவ விழா 4-வது நாள்: கற்பக விருட்சம், அனுமன் வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதிஉலா
x

வாகன வீதி உலா முன்னால் பல்வேறு கலை குழுவினரின் நடன, நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன.

திருப்பதி

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை கற்பக விருட்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் ‘முரளி கிருஷ்ணர்’ அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வாகன வீதி உலா முன்னால் பல்வேறு கலை குழுவினரின் நடன, நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. இறை இசை வாத்தியங்களும் இசைக்கப்பட்டன.

வாகன வீதிஉலாவில் திருமலை ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான அதிகாரி அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி வீரபிரம்மன், பாதுகாப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா, கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை அனுமன் வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை பல்லக்கு உற்சவம், இரவு ‘சிகர’ நிகழ்ச்சியாக தங்க யானை வாகன வீதிஉலா நடக்கிறது.

1 More update

Next Story