திருப்பதி ஏழுமலையான் கோவில் ரத சப்தமி விழாவில் 3 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்


திருப்பதி ஏழுமலையான் கோவில் ரத சப்தமி விழாவில் 3 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
x

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு 14 வகையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் சூரிய ஜெயந்தி விழா எனப்படும் ரத சப்தமி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அன்று முன்னெப்போதும் இல்லாத வகையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று கோவிலுக்குள் சென்றும், கோவிலின் நான்கு மாடவீதிகளில் நடந்த வாகனச் சேவையிலும் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, தேவஸ்தான அதிகாரி அனில்குமார் சிங்கால் ஆகியோர் பக்தர்களிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டனர். அப்போது தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள், காவல்துறை, மாவட்ட நிர்வாகம், ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக பக்தர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

அப்போது அவர்கள் பேசுகையில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், சுண்டல், பாதாம் பால் உள்ளிட்ட 14 வகையான உணவுப் பொருட்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் வழங்கப்பட்டன. பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்க 2 ஆயிரம் சேவா சங்க தொண்டர்களும், கேலரிகளில் காத்திருந்த பக்தர்களுக்கு குடிநீர் வழங்க 750 பேரும், பக்தர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த 250 பேரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அன்னப்பிரசாதம், குடிநீர், தங்குமிடம் மற்றும் தங்களுக்கு வழங்கப்பட்ட பிற சேவைகளில் பக்தர்கள் மிகுந்த திருப்தியை வெளிப்படுத்தியதாக, கூறினர்.

1 More update

Next Story