திருமலையில் 19 நாட்கள் நடக்கும் பாஷ்யங்கார் உற்சவம் தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாஷ்யங்கார் உற்சவம் நேற்று தொடங்கி 19 நாட்கள் அனுசரிக்கப்படுகிறது.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாஷ்யங்கார் உற்சவம் நேற்று தொடங்கி 19 நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. அடுத்த மாதம் (மே) 2-ந்தேதி பாஷ்யங்கார் சாத்துமுறை நடக்கிறது.
பகவத் ராமானுஜர் வசிஷ்டாத்வைத கோட்பாட்டின் அடிப்படையில் மீமாம்ச கிரந்தத்துக்கு 'ஸ்ரீபாஷ்யம்' என்ற உரையை எழுதினார். எனவே அவர் 'பாஷ்யங்கார்' என அழைக்கப்பட்டார். ராமானுஜர் பிறந்த நாளான ஆருத்ரா நட்சத்திரத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏழுமலையான் கோவிலில் பாஷ்யங்கார் சாத்துமுறை நடத்தப்படுகிறது.
பாஷ்யங்கார் உற்சவத்தின் முதல் நாளான நேற்று காலை ஏழுமலையான் கோவிலில் முதல் மணி அடிக்கப்பட்ட பிறகு, கோவிலின் நான்கு மாட வீதிகளில் தங்கத் திருச்சி வாகனத்தில் ராமானுஜரின் விக்ரகம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
நிகழ்ச்சியில் ஜீயங்கார்கள் பங்கேற்று திவ்யப் பிரபந்த கோஷ்டியை நடத்தினர்.
Related Tags :
Next Story