விருதுநகர் சொக்கநாதர் கோவிலில் உலக நன்மை வேண்டி 1008 சங்காபிஷேகம்

சங்காபிஷேகத்திற்கு பிறகு சிறப்பு அலங்காரத்துடன் அருள்பாலித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விருதுநகர்
விருதுநகரில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு, உலக நன்மைக்காக 1008 சங்காபிஷேக பூஜை நடைபெற்றது.
இதையொட்டி கோவில் வளாகத்தில் 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பி வைக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதையடுத்து மூலவருக்கு அந்த புனிதநீர் கொண்டு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் அருள்பாலித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story






