வைரலாகும் மலேசியாவில் விஜய் பங்கேற்ற விழா வீடியோ

மலேசியாவில் தமிழ்த் திரைத் துறையின் விளம்பரதாரர் அப்துல் மாலிக்கின் புதுமனைப் புகுவிழாவில் விஜய் பங்கேற்ற வீடியோ வெளியாகியுள்ளது.
மலேசியாவில் தமிழ்த் திரையுலகின் விளம்பரதாரராக இருந்துவரும் அப்துல் மாலிக் தஸ்திகீரின் புதுமனைப் புகுவிழாவில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் பங்கேற்று, அப்துல் மாலிக்கின் புதிய வீட்டைத் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, அப்துல் மாலிக்கின் குடும்பத்தினருடன் கேக் வெட்டி, கொண்டாடியதுடன், புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியின் வீடியோ வெளியாகி, சமூக ஊடகங்களில் விஜய் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
விஜய்யின் தீவிர ரசிகரான அப்துல் மாலிக்தான், மலேசியாவில் ‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






