நாளை ரீ-ரிலீஸாகும் விஜய்யின் “மாஸ்டர்” “லியோ” திரைப்படங்கள்

விஜய்யின் மாஸ்டர் மற்றும் லியோ திரைப்படங்கள் நாளை ரீ-ரிலீஸாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாஸ்டர் மற்றும் லியோ திரைப்படங்களை நாளை ரீ-ரிலீஸ் செய்யவிருப்பதாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம் மற்றும் கைதி படத்தை தொடர்ந்து மாஸ்டர் திரைப்படம் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி வெளியானது. விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் இப்படத்தில் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந்தேதி ‘லியோ’ திரைப்படம் வெளியானது . இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், மடோனா செபாஸ்டியன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான இந்த இரு படங்களின் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
‘ஜன நாயகன்’ ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும், மாஸ்டரும் லியோவும் திரையிடப்படுவதால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.






