ஓடிடியில் வெளியாகும் கார்த்தியின் 'வா வாத்தியார்'...எதில், எப்போது பார்க்கலாம்?

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.
கார்த்தி நடிப்பில் வெளியான 'வா வாத்தியார்' படம் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜன நாயகன் திட்டமிட்டபடி வெளியாகாததால், கார்த்தியின் வா வாத்தியார் அந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு கடந்த 14-ம் தேதி வெளியானது. நலன் குமாரசாமி இயக்கிய இந்தப் படம், பாக்ஸ் ஆபீஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியது.
இப்போது இந்தப் படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி, அமேசான் பிரைம் வீடியோவில் நாளை (ஜனவரி 28) தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்டிரீமிங் ஆக உள்ளது.
திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் ஓடிடி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார். மேலும், சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்தராஜ், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி.எம்.சுந்தர், ரமேஷ் திலக் மற்றும் பி.எல்.தேனப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் பேனரின் கீழ் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.






