நவீன் சந்திரா நடித்த "ஹனி" படத்தின் டீசர் வெளியீடு


நவீன் சந்திரா நடித்த ஹனி படத்தின் டீசர் வெளியீடு
x
தினத்தந்தி 21 Jan 2026 1:05 PM IST (Updated: 21 Jan 2026 5:33 PM IST)
t-max-icont-min-icon

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

தமிழில், பிரம்மன், சிவப்பு, பட்டாஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், லெவன் உட்பட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நவீன் சந்திரா. இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இவர் தற்போது ஹனி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கருணகுமார் இயக்கியுள்ளார். இதில் திவ்யா பிள்ளை, திவி வத்யா, ராஜா ரவீந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், ஹனி படத்தின் டீசரை நடிகர் நவீன் சந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.

1 More update

Next Story