"ஸ்பிரிட்" ரிலீஸ் தேதி அறிவிப்பு...எப்போது திரைக்கு வருகிறது தெரியுமா?


Spirit Movie Release Date: Prabhas-Sandeep Reddy Vangas Film To Hit Theatres In March 2027
x
தினத்தந்தி 16 Jan 2026 7:16 PM IST (Updated: 16 Jan 2026 7:28 PM IST)
t-max-icont-min-icon

பாலிவுட் நடிகை திரிப்தி டிம்ரி இப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.

சென்னை,

நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா கூட்டணியில் உருவாகி வரும் படம் "ஸ்பிரிட்". இதில் பிரபாஸ் போலீஸ் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட் நடிகை திரிப்தி டிம்ரி இப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.

மேலும், பிரகாஷ் ராஜ், விவேக் ஓபராய், காஞ்சனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கொரிய சூப்பர் ஸ்டார் டான் லீயும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிலீஸ் தேதி அறிவிகப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் அடுத்தாண்டு மார்ச் 5-ம் தேதி வெளியாகிறது.

1 More update

Next Story