18 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸாகும் சிம்புவின் சூப்பர் ஹிட் படம்


18 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸாகும் சிம்புவின் சூப்பர் ஹிட் படம்
x

புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்த படம் பிப்ரவரி 6-ந் தேதி திரைக்கு வருகிறது.

முன்னணி நடிகர்களின் வெற்றி படங்கள் மீண்டும் ரீ-ரிலீசாகும் போக்கு தமிழ் சினிமாவில் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் கூட அஜித்குமாரின் ‘மங்காத்தா' படம் ரீ-ரிலீசாகி வசூல் குவித்து வருகிறது.

அந்தவகையில் 2008-ம் ஆண்டில் எஸ்.சரவணன் இயக்கத்தில் சிம்பு, சனா கான், சினேகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி ‘ஹிட்' அடித்த ‘சிலம்பாட்டம்' படம் மீண்டும் ரிலீசுக்கு வருகிறது. புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்த படம் பிப்ரவரி 6-ந் தேதி திரைக்கு வருகிறது.

சிம்பு இரட்டை வேடங்களில் நடித்த இந்த படம் வசூல் குவித்ததுடன், சிம்புவின் திரைப் பயணத்தில் முக்கியமான படமாகவும் அமைந்தது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களும் கொண்டாடப்பட்டன. இந்த படம் 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரிலீசுக்கு வரவிருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.

1 More update

Next Story