ஷாருக்கானின் “கிங்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


ஷாருக்கானின் “கிங்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x

ஷாருக்கானின் ‘கிங்’ படம் டிசம்பர் 24ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்தி பட உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் தற்போது ‘வார்’ மற்றும் ‘பதான்’ படங்களை இயக்கி புகழ் பெற்ற, சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ‘கிங்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவரது மகள் சுஹானா கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கிங்’ படத்தின் டைட்டில் டீசரை வெளியானது.

இந்நிலையில், ஷாருக்கானின் ‘கிங்’ படம் டிசம்பர் 24ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

1 More update

Next Story