’அந்த நடிகரை ரொம்ப பிடிக்கும்’...’துரந்தர்’ பட நடிகை

சாரா அர்ஜுன், தமிழில், `தெய்வத்திருமகள்’, சைவம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஐதராபாத்,
இயக்குனர் குணசேகரின் “யூபோரியா”-ல், ’துரந்தர்’ நடிகை சாரா அர்ஜுன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
போட்டித்தேர்வுக்குப் படித்திருக்கும் ஒர் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட உண்மையான சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் பூமிகா சாவ்லா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், நேற்று இப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. அப்போது, சாரா அர்ஜுன் பல விஷயங்களை வெளிப்படுத்தினார்.
விஜய் தேவரகொண்டா தனக்கு மிகவும் பிடித்த தெலுங்கு நடிகர் என்று தெரிவித்தார். யூபோரியாவைத் தவிர, இயக்குனர் கவுதம் தின்னனுரியின் ’மேஜிக்’ படத்திலும் தான் நடித்திருப்பதாக கூறினார்.
குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய சாரா அர்ஜுன், தமிழில், `தெய்வத்திருமகள்’, சைவம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.






