விஜய் ஆண்டனி தயாரித்துள்ள 'பூக்கி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


விஜய் ஆண்டனி தயாரித்துள்ள பூக்கி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Jan 2026 2:16 AM IST (Updated: 16 Jan 2026 2:17 AM IST)
t-max-icont-min-icon

கணேஷ் சந்திரா இயக்கத்தில் அஜய் தீஷன் நடித்துள்ள திரைப்படம் 'பூக்கி'.

சென்னை,

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். தற்போது இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிமாணங்களில் கலக்கி வரும் விஜய் ஆண்டனி தற்போது ‛பூக்கி’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

2கே தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சினைகளை மையமாக வைத்து கலக்கலான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில், 'பூக்கி' படம் உருவாகி உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் 'பூக்கி' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படம் வருகிற பிப்ரவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story