திருமண நாளன்று பிறந்த மகள்...முதல் புகைப்படத்தை பகிர்ந்த ஹீரோ

கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி இவரது திருமணம் நடந்தது.
சென்னை,
பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான பத்ரலேகாவுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. தற்போது அது அந்த குழந்தையின் முதல் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட அவர்கள், குழந்தைக்கு 'பார்வதி பால் ராவ்' என்று பெயரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதைப் பார்த்த திரைப்பட பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ராஜ்குமார் ராவ் மற்றும் அவரது மனைவிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ராஜ்குமார் நாயகனாக நடித்து வெளியான சிட்டி லைட்ஸ் எனும் படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பத்ரலேகா நடித்திருந்தார். அப்போதிருந்து இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆண்டு (நவம்பர் 15) இதே நாளில் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.
சாஹித், பதாய் தோ, மோனிகா ஓ மை டார்லிங், ஸ்ட்ரீ போன்ற திரைப்படங்களில் நடிகர் ராஜ்குமார் ராவ் நாயகனாக நடித்திருந்தார்.






