’பவர் ரேஞ்சர்ஸ்’ தொடரில் வில்லியாக பிரியங்கா சோப்ரா?

பிரியங்கா சோப்ரா தற்போது வாரணாசி படத்தில் நடித்து வருகிறார்.
சென்னை,
உலகளவில் பிரபல நட்சத்திரமாக திகழும் பிரியங்கா சோப்ரா, மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிஸ்னி+ நிறுவனம் தற்போது உருவாக்கி வரும் ‘பவர் ரேஞ்சர்ஸ்’ (Power Rangers) தொடரில், ரீட்டா ரெபல்சா (Rita Repulsa) எனும் வில்லி கதாபாத்திரத்திற்கு பிரியங்கா சோப்ராவை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், டிஸ்னி ஸ்டுடியோவின் விருப்பப் பட்டியலில் பிரியங்காவின் பெயர் முன்னணியில் உள்ளது. ஏற்கனவே 2017-ல் வெளியான ‘பேவாட்ச்’ (Baywatch) திரைப்படத்தில் விக்டோரியா லீட்ஸ் என்ற வில்லி கதாபாத்திரத்தில் தனது மிரட்டலான நடிப்பை பிரியங்கா வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






