ஆஸ்கார் பரிந்துரை பட்டியல் வெளியீடு

‘சின்னர்ஸ்' திரைப்படம் 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
நியூயார்க்,
2026-ம் ஆண்டுக்கான 98-வது ஆஸ்கார் விருது பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘சின்னர்ஸ்' திரைப்படம் 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து ‘ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' திரைப்படம் 13 பிரிவுகளில் பரிந்துரைகளைப் பெற்றுள்ளது. சிறந்த நடிகர் விருதுக்கு டிமோதி சாலமேட், லியோனார்டோ டி காப்ரியோ, எத்தன் ஹாக், மைக்கேல் பி ஜோர்டான் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்தியா சார்பில் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே அனுப்பப்பட்ட ‘ஹோம்பவுண்ட்' படம் பரிந்துரை பட்டியலில் இடம்பெறாதது இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.
Related Tags :
Next Story






