கவனம் ஈர்க்கும் ’அகண்டா 2’ நடிகையின் புதிய பட டிரெய்லர்


Nari Nari Naduma Murari trailer promises a solid entertainer
x
தினத்தந்தி 12 Jan 2026 1:44 AM IST (Updated: 12 Jan 2026 2:27 AM IST)
t-max-icont-min-icon

இப்படம் வருகிற 14-ம் தேதி திரைக்கு வருகிறது.

சென்னை,

கடந்த 1990-ம் ஆண்டு நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான படம் "நரி நரி நடுமா முராரி". இது அவரது கெரியரில் மறக்கமுடியாத படங்களில் ஒன்று. 'எங்கேயும் எப்போதும்'பட நடிகர் ஷர்வானந்தின் 37வது படத்திற்கு "நரி நரி நடுமா முராரி" எனப்பெயரிடப்பட்டுள்ளது.

அனில் சுங்கராவின் ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ராமபிரம்மம் சுங்கரா தயாரிக்கும் இப்படத்தை சமாஜவரகமனா புகழ் ராம் அப்பாராஜு இயக்குகிறார். இதில் சம்யுக்தா, சாக்சி வைத்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படம் வருகிற 14-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதில் கதாநாயகியாக நடித்திருக்கும் சம்யுக்தா மேனன் கடைசியாக ’அகண்டா 2 ’படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story