நடிகர் தாடி பாலாஜிக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கிய லட்சிய ஜனநாயக கட்சி நிறுவனர்


நடிகர் தாடி பாலாஜிக்கு  பொதுச்செயலாளர் பதவி வழங்கிய  லட்சிய ஜனநாயக கட்சி நிறுவனர்
x
தினத்தந்தி 25 Jan 2026 9:06 PM IST (Updated: 25 Jan 2026 9:15 PM IST)
t-max-icont-min-icon

தாடி பாலாஜி, சமீபத்தில் விஜய்யின் தவெக கட்சியில் இருந்து விலகி லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தார்.

சென்னை,

விஜய்யின் தவெகவில் இருந்து விலகி ஜோஸ் சார்லஸ் கட்சியில் நடிகர் தாடி பாலாஜி இணைந்தார். லாட்டரி அதிபர் மார்டின் மகன் ஜோஸ் சார்லஸ் புதுச்சேரியில் ஜேசிஎம் அமைப்பு தொடங்கி நடத்தி வந்தார். அவர் கடந்த வாரம் லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கினார்.

தவெக கட்சி தொடங்கப்பட்ட சிலநாட்களிலேயே அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட தாடி பாலாஜி, தவெகவுக்கு எவ்வளவு ஆதரவாக பேசியும் பொறுப்பு வழங்கப்படாததால் விரக்தியில் இருந்தார். பின்னர் தவெகவையே விமர்சனம் செய்யத் தொடங்கினார். தனது நெஞ்சில் விஜய்யின் முகத்தை தாடி பாலாஜி பச்சைக் குத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் கட்சியான தவெகவில் இருந்த நடிகர் தாடி பாலாஜி, அக்கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தார். அவர் வரும் தேர்தலில் பிரசாரம் செய்யவும் உள்ளார்.

இந்நிலையில், கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், தாடி பாலாஜிக்கு புரப்புரை பொதுச்செயலாளர் பதவி வழங்கியுள்ளார்.

1 More update

Next Story