ஜீவாவின் “தலைவர் தம்பி தலைமையில்” டிரெய்லர் வெளியானது
ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் வரும் 15ம் தேதி வெளியாகிறது.
சென்னை,
'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் 'சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கொரில்லா, ரவுத்திரம், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். கடைசியாக இவர் "அகத்தியா" படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஜீவா 'பேலிமி' படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தில் நடித்துள்ளார். இதில் ஜீவாவுடன் தம்பி ராமையா, பிரார்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 'ராவண கோட்டம்' படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. அரசியல் கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 15ந் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.







