ஏமாற்றம்...ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறிய இந்திய படம்

ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 15-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
சென்னை,
ஆஸ்கர் விருதுகளின் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான இறுதிப்பட்டியலில் இந்தியாவின் ’ஹோம்பவுண்ட் ’ திரைப்படம் இடம்பெறவில்லை.
பெறும் வரவேற்பையும் பல சர்வதேச திரைப்பட விருதுகளையும் பெற்றிருந்த இத்திரைப்படம் ஆஸ்கர் விருதுகள் பட்டியலில் இடம்பெறாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட படமான ஹோம்பவுண்ட் படம் இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்று, ஆஸ்கரை வெல்லும் என்று பலரும் நினைத்துக் கொண்டு இருக்கையில், ’ஹோம்பவுண்ட் ’ படம் வெளியேறியது.
98ஆவது ஆஸ்கர் விருதுக்கான இறுதி நாமினேஷன் பட்டியலை ஆஸ்கர் நேற்று அறிவித்தது. அதில், வெளிநாட்டு படங்களுக்கான பிரிவில் இருந்து ஹோம்பவுண்ட் படம் வெளியேறியது. அந்த பிரிவில், பிரேசிலின் 'தி சீக்ரெட் ஏஜென்ட்', பிரான்சின் 'இட் வாஸ் ஜஸ்ட் அன் ஆக்சிடென்ட்', நார்வேயின் 'சென்டிமென்டல் வேல்யூ', ஸ்பெயினின் 'சீரத்', துனிசியாவின் 'தி வாய்ஸ் ஆப் ஹிந்த் ரஜாப்' ஆகிய ஐந்து படங்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 15-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.






