அமீர்கான் மகனுக்கு ஜோடியான சாய் பல்லவி...கவனம் ஈர்க்கும் டீசர்


Ek Din Teaser Out Now
x
தினத்தந்தி 16 Jan 2026 4:40 PM IST (Updated: 16 Jan 2026 6:34 PM IST)
t-max-icont-min-icon

இந்த படம் வரும் மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

பிரேமம், அமரன், ஷ்யாம் சிங்கா ராய் மற்றும் பிடா போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் சாய் பல்லவி .

இவர் தற்போது பாலிவுட்டில் ராமாயணம் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இதற்கிடையில், நடிகர் அமீர்கான் தயாரிப்பில் சாய் பல்லவி நடிக்கும் ‘ஏக் தின்’ திரைப்படம் அதற்கு முன்னதாக திரைக்கு வர உள்ளது. இதன் மூலம் அவர் பாலிவுட்டில் அறிமுகமாகும் படமாக ‘ஏக் தின்’ உருவெடுத்துள்ளது.

இயக்குநர் சுனில் பாண்டே இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் ஜுனைத் கான் நாயகனாக நடித்திருக்கிறார். இவர் அமீர்கானின் மகனாவார்.

இந்த நிலையில், ‘ஏக் தின்’ திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் இந்த படம் வரும் மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story