'அட்டகத்தி' தினேஷின் ‘கருப்பு பல்சர்’...டிரெய்லர் வெளியீடு


Attakathi Dinesh’s Karuppu Pulsar Trailer out Now
x

இப்படம் வருகிற 30ம் தேதி வெளியாகிறது.

சென்னை,

'அட்டகத்தி' தினேஷ் நடிக்கும் ‘கருப்பு பல்சர்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.

பிரபல இயக்குனர் பா. இரஞ்சித் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு 'அட்டகத்தி' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தினேஷ். ‘அட்டகத்தி’ படத்தின் பிரமாண்ட வெற்றியால் தினேஷ் பெயருக்கு முன் படத்தின் பெயர் இடம்பெற்றது. தொடர்ந்து விசாரணை, குக்கூ, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், திருடன் போலீஸ், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் தன் நடிப்பு திறமையால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் தினேஷ் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த ‘லப்பர் பந்து’ படத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார். இப்படத்தை தொடர்ந்து, இவர் முரளி கிருஷ் இயக்கத்தில் ‘கருப்பு பல்சர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் ரேஷ்மா, மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 30ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், ‘கருப்பு பல்சர்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரெய்லர் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

1 More update

Next Story