மீனாட்சி சவுத்ரி படத்தில் குத்தாட்டம் போட்ட ’குடும்பஸ்தன்’ நடிகை - பாடல் வைரல்


AnaganagaOkaRaju 3rd Single Andhra To Telangana out now
x

இப்படத்தில் நவீன் பொலிஷெட்டி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

சென்னை,

2024-ம் ஆண்டில் ஆறு படங்களில் நடித்த மீனாட்சி சவுத்ரிக்கு கடந்த ஆண்டு ஒரே ஒரு படம் மட்டுமே நடித்திருந்தார். இருப்பினும், இந்த ஆண்டு மீண்டும் தொடர்ச்சியான படங்களுடன் மகிழ்விக்க தயாராகி வருகிறார்.

கடைசியாக துல்கர் சல்மானுடன் 'லக்கி பாஸ்கர்' மற்றும் வெங்கடேஷுடன் 'சங்கராந்திகி வஸ்துனம்' போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் நடித்திருந்த இவர், தற்போது நாக சைதன்யாவின் ’விருஷகர்மா’மற்றும் நவீன் பாலிஷெட்டியின் 'அனகனகா ஓக ராஜு’ ஆகிய படங்களில் பணியாற்றி வருகிறார்.

இதில், ’அனகனகா ஓக ராஜு’ படம் வருகிற 14-ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் மாரி இயக்கி இருக்கிறார். இப்படத்தில் நவீன் பொலிஷெட்டி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் 3-வது பாடல் ’ஆந்திரா டூ தெலுங்கானா’ வெளியாகி இருக்கிறது. இதில், தமிழில் வெளியாகி கவனம் பெற்ற ’குடும்பஸ்தன்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த சான்வி மேகனா குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

1 More update

Next Story