கவனம் ஈர்க்கும் 'மீனாட்சி சவுத்ரி'யின் அடுத்த பட டிரெய்லர்

மீனாட்சி சவுத்ரி தற்போது 'அனகனகா ஓக ராஜு’ படத்தில் நடித்துள்ளார்.
சென்னை,
2024-ம் ஆண்டில் ஆறு படங்களில் நடித்த மீனாட்சி சவுத்ரிக்கு கடந்த ஆண்டு ஒரே ஒரு படம் மட்டுமே நடித்திருந்தார். இருப்பினும், இந்த ஆண்டு மீண்டும் தொடர்ச்சியான படங்களுடன் மகிழ்விக்க அவர் தயாராகி வருகிறார்.
கடைசியாக துல்கர் சல்மானுடன் 'லக்கி பாஸ்கர்' மற்றும் வெங்கடேஷுடன் 'சங்கராந்திகி வஸ்துனம்' போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் நடித்திருந்த இவர், தற்போது நாக சைதன்யாவின் ’விருஷகர்மா’மற்றும் நவீன் பாலிஷெட்டியின் 'அனகனகா ஓக ராஜு’ ஆகிய படங்களில் பணியாற்றி வருகிறார்.
இதில், ’அனகனகா ஓக ராஜு’ படம் வருகிற 14-ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.
Related Tags :
Next Story






