அனைத்து தடைகளும் கிளியர்...பொங்கலுக்கு வெளியாகும் ’வா வாத்தியார்’

'வா வாத்தியார்' படம் வருகிற 14 ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
சென்னை,
கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படத்திற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தின் ரிலீஸ், பைனான்ஸ் பிரச்சினைகள் காரணமாக தள்ளிப்போனது. சமீபத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டுடியோ கிரீன் சார்பில் ரூ. 3 கோடி 75 லட்சம் தொகைக்கான டிடி செலுத்தப்பட்டுள்ளது
இதனை தொடர்ந்து மீதி தொகையையும் செலுத்தினால் படத்தினை பொங்கலுக்கு வெளியிடலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் நாளை ஒரு நாளுக்குள் மீதமுள்ள தொகையை தயாரிப்பு தரப்பு திருப்பி செலுத்தி விடுமா? திட்டமிட்டப்படி படம் வெளியாகுமா என்ற குழப்பங்கள் எழுந்தது. மறுபடியும் ரிலீஸ் தள்ளிப்போகுமா என்ற சந்தேகங்களையும் கிளப்பியது.
இந்நிலையில், அனைத்து தடைகளும் கிளியரானதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் புதிய போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. அதில், 'வா வாத்தியார்' படம் வருகிற 14 ஆம் தேதி ரிலீசாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக திட்டமிட்டப்படி இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்






