"டிமான்ட்டி காலனி 3" படத்தின் டிஜிட்டல் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்


டிமான்ட்டி காலனி 3 படத்தின் டிஜிட்டல் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்
x
தினத்தந்தி 12 Jan 2026 11:45 AM IST (Updated: 12 Jan 2026 11:45 AM IST)
t-max-icont-min-icon

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.

சென்னை,

அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் டிமான்ட்டி காலனி. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து 'டிமான்ட்டி காலனி ' படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.

அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள 'டிமான்ட்டி காலனி 2' படத்தில் அருள்நிதி , பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து தற்போது இதன் 3-ம் பாகம் உருவாகி வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி அனைவரது கவனத்தை பெற்றன.

இந்நிலையில், ‘டிமான்ட்டி காலனி 3’ படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளை பிரபல நிறுவனமான ஜீ5 நிறுவனம் ரூ.50 கோடிக்கு கைப்பற்றி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நடிகர் அருள்நிதியின் திரைப்பயணத்தில் முதன்முறையாக ரூ.50 கோடிக்கும் அதிகமான ‘ப்ரீ-பிசினஸ்’ செய்த படம் என்ற பெருமையை ‘டிமான்ட்டி காலனி 3’ பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story