திருப்பூரில் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு


திருப்பூரில் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Jan 2026 11:33 AM IST (Updated: 22 Jan 2026 1:28 PM IST)
t-max-icont-min-icon

கவிஞர் வைரமுத்து கலந்து கொண்ட நிகழ்ச்சியில் செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்,

திருப்பூரில் பாடலாசிரியர் வைரமுத்துவை நோக்கி செருப்பு வீசப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த வைரமுத்துவிற்கு அங்கு இருந்த வழக்கறிஞர்கள் வரவேற்பு அளித்தனர்.

அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. செருப்பு வீசிய பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. எனினும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

1 More update

Next Story