விடுமுறை தினம்: திருவண்ணாமலையில் நீண்ட நேரம்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 26.01.2026
x
Daily Thanthi 2026-01-26 06:59:02.0
t-max-icont-min-icon

விடுமுறை தினம்: திருவண்ணாமலையில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். இந்த நிலையில் குடியரசு தினத்தையொட்டி நேற்று முன்தினம் முதல் இன்று வரையில் தொடர்ந்து 3 நாட்கள் என தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

குடியரசு தின விடுமுறை தினமான இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பக்தர்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story