சொந்த வீடு மனை அமையும்...வார ராசிபலன் - 12.10.2025 முதல் 18.10.2025 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.
இந்த வார ராசிபலன்:-
மேஷம்
நட்புக்கும் உறவுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் மனதில் குழப்பம் அகன்று தெளிவு பிறக்கும். புதிய தொடர்புகள், வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.
தொழில்துறையினர், வியாபாரிகள் நீண்ட நாட்களாக திட்டமிட்ட தொழில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரியின் பாராட்டு பெறுவார்கள்.
ரியல் எஸ்டேட்டிலும், ஷேர் மார்க்கெட்டிலும் புதிய முதலீடுகளை செய்யலாம். மாணவர்கள் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வதற்கான வழிகாட்டுதல் கிடைக்க பெறுவர்.
பல இடங்களுக்கும் பயணம் செய்வதால் அசதி, உடல் சோர்வு அகல தக்க ஓய்வு, மன அமைதி தேவை. மாலை நேரங்களில் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாற்றி வழிபட்ட துன்பங்கள் விலகும்.
ரிஷபம்
காலமறிந்து செயல்பட்டு வெற்றி பெறும் ரிஷபம் ராசியினருக்கு சுபகாரிய தடை உருவாகி விலகும். சிலருக்கு சொந்த வீடு மனை அமையும் யோகம் உருவாகும். பழைய கடன்கள் தீரும்.
தொழில் துறையினர், வியாபாரிகள் எதிர்பாராத சிக்கல்களை சந்தித்து அவற்றை வெற்றிகரமாக கடந்து செல்வர். உத்தியோகஸ்தர்கள் பணி சார்ந்த புதிய தொழில்நுட்பங்களை மனதில் சலிப்பின்றி கற்க வேண்டும்.
ரியல் எஸ்டேட்டில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர். ஷேர் மார்க்கெட்டில் எதிர்பார்த்த லாபம் வரும். மாணவர்கள் கல்வி, எதிர்கால முன்னேற்றத்திற்கான புதுப்புது விஷயங்களை அறிந்து கொள்வர்.
ஜலதோஷம், காய்ச்சல், கை-கால் வலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் விலகும். ஆதரவற்ற அல்லது அனாதை ஆசிரமங்களில் உள்ள முதியோர்களுக்கு ஆடை, அன்னதானம் செய்வது நன்மை தரும்.
மிதுனம்
சிக்கலான சூழ்நிலையிலும் குழப்பமில்லாமல் செயல்படும் மிதுனம் ராசியினருக்கு இந்த வாரம் எதிர்பாராத தனவரவு உண்டு. குடும்பத்தில் எதிர்பார்த்த சுப நிகழ்ச்சிகள் நல்ல விதமாக நடக்கும்.
தொழில்துறையினர், வியாபாரிகள் தொழில் விரிவாக்க பணிகளை திட்டமிட்டு மேற்கொண்டு உயரலாம். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைத்து ஆதாயம் பெறுவார்கள்.
ரியல் எஸ்டேட் துறைக்கு இது நல்ல காலம். ஷேர் மார்க்கெட்டில் அரசு துறையில் லாபம் உண்டு. மாணவர்கள் பல்வேறு விளையாட்டுகளில் திறமை காட்டி கல்வி நிறுவனங்களுக்கு பெருமை சேர்ப்பர்.
பாஸ்ட்புட் வகைகளை இரவில் உண்பதை தவிர்த்தால் வயிற்று கோளாறு, அஜீரணம் ஏற்படாமல் தவிர்க்கலாம். வயதில் முதிய பெண் உறவினர்களை வணங்கி ஆசி பெறுவது சுப காரிய தடைகளை அகற்றும்.
கடகம்
துணிச்சலோடு செயல்பட்டு காரிய வெற்றி தரும் கடகம் ராசியினருக்கு இது வெற்றிகரமான வாரம். கடந்த காலங்களில் கடைப்பிடித்த பொறுமைக்கு ஏற்ற பலன் கை மேல் வந்து சேரும் சமயம் இது.
வளர்ச்சி அடைவதில் பல தடை தாமதங்களை சந்தித்த தொழில் துறையினர், வியாபாரிகள் இனிமேல் முன்னேற்றம் பெறுவர். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பணி உயர்வு, ஊதிய உயர்வுகளை பெற்று உற்சாகம் அடைவர்.
ரியல் எஸ்டேட்டிலும், ஷேர் மார்க்கெட்டிலும் பிரகாசமான வாய்ப்புகள் உருவாகி வருகிறது. மாணவர்கள் நண்பர்களோடு உற்சாகமாக சுற்றுலா பயணம் சென்று மகிழ்வார்கள்.
ஜலதோஷம் காய்ச்சல், தலைவலி ஏற்பட்டு தக்க மருத்துவ சிகிச்சையால் குணமாகும். அம்மன் கோவில் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், இனிப்பு தானமாக அளிப்பதால் நன்மைகள் நாடி வரும்.
சிம்மம்
பார்த்தால் பசு பாய்ந்தால் புலி என்பது போல செயல்பட்டு காரிய வெற்றி அடையும் சிம்மம் ராசியினர் இந்த வாரம் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு வாகன யோகம் ஏற்படும்.
தொழில் துறையிலும், வியாபாரத்திலும் எதிர்பாராத செலவுகளை சந்தித்து சுமுகமாக சரி செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் தாங்களே களத்தில் இறங்கி செயல்படுவது தான் நல்லது.
ரியல் எஸ்டேட்டிலும், ஷேர் மார்க்கெட்டிலும் முதலீடுகளை செய்வதற்கான ஏற்ற காலம் நெருங்கி வருகிறது. மாணவர்கள் உற்சாகமாக இருந்தாலும் பாடங்களிலும் கவனம் செலுத்தி படிக்க வேண்டிய காலம் இது.
வயிற்று கோளாறு, வலி, முதுகுவலி ஏற்பட்டு தக்க மருத்துவ சிகிச்சையால் விலகும். பயணங்கள் மேற்கொள்ளும் பொழுதும், முக்கியமான நபர்களை சந்திக்கும் பொழுதும் வெள்ளை நிற ஆடைகளை அணிவது வெற்றி தரும்.
கன்னி
நண்பர்களை குடும்பத்தில் ஒருவராக நடத்தும் குணம் கொண்ட கன்னி ராசியினருக்கு இந்த வாரம் காரிய வெற்றி ஏற்படும். எதிர்பார்த்த தன வரவு கைகளில் வந்து சேரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
தொழில் துறையிலும், வியாபாரத்திலும் தொழில் விரிவாக்க முயற்சிகளை திட்டமிட்டு, பொறுமையாக செய்ய வேண்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ரியல் எஸ்டேட்டில் கட்டுமான பணிகளை நேரில் பார்வை செய்வது அவசியம். ஷேர்மார்க்கெட்டில் புது விஷயங்கள் பிடிபடும். மாணவர்களுக்கு புதிய நண்பர்களால் படிப்பில் பல நன்மைகள் ஏற்படும்.
வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது சுகாதாரமான சூழலில் உணவு, தண்ணீர் உள்ளிட்ட பானங்களை பருக வேண்டும். அம்மன் கோவில் பூஜைக்கு வாசனாதி திரவியங்கள், பூக்கள் அளிப்பது நன்மை தரும்.
துலாம்
தகுந்த. வரை காத்திருந்து காரிய வெற்றியை அமைதியாக முடிக்கும் திறன் பெற்ற துலாம் ராசியினர் இந்த வாரம் நல்ல சுப காரியங்களில் கலந்து கொள்வர். வெளிநாட்டு தொடர்பு அல்லது பயண வாய்ப்பு கிடைக்கும்.
தொழில்துறையிலும், வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபத்தை பெற இரவு-பகல் பாராமல் உழைக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகள் ஆதரவால் மனதிற்கினிய ஆதாயங்களை பெறுவர்.
ஷேர் மார்க்கெட்டில் வேளாண் நிறுவன பங்குகளில் லாபம் உண்டு. ரியல் எஸ்டேட்டில் பெருநகர கட்டுமான பணிகளை தொடங்குவர். மாணவர்கள் விளையாட்டை விட கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அலைச்சல் காரணமாக மன உளைச்சல், தலைவலி, முதுகுவலி ஏற்பட்டு மருத்துவத்தால் குணமாகும். ஆதரவற்ற வயதான பெண்களுக்கு ஆடைதானம், அன்னதானம் செய்து ஆசி பெறுவது நன்மை தரும்.
விருச்சிகம்
யார் எது சொன்னாலும் அப்படியே நம்பாமல் உண்மையை சீர்தூக்கி பார்க்கும் விருச்சிக ராசியினர் இவ்வாரம் புதிய முயற்சிகளை தள்ளி வைக்க வேண்டும். பொறுமை கடலினும் பெரிது என்பது இந்த வாரம் தெரிய வரும்.
தொழில் துறையினரும், வியாபாரிகளும் மனதில் போட்ட திட்டங்களை நேரம் பார்த்து நிறைவேற்றலாம். உத்தியோகஸ்தர்கள் நிர்வாகத்தின் மூலம் எதிர்பாராத ஆதாயங்களை பெற்று மகிழ்வர்.
ஷேர் மார்க்கெட்டில் ஹோட்டல் தொழில் நிறுவன பங்குகளில் லாபம் உண்டு. ரியல் எஸ்டேட்டில் பழைய கடன் தீரும் காலம் இது. மாணவர்கள் புதிய பொறியியல் தொழில்நுட்பங்களை கற்கும் வாய்ப்பு பெறுவர்.
தலைசுற்றல், மயக்கம் வருவதுபோல இருந்தால் மருத்துவ சிகிச்சை, ரத்த பரிசோதனை செய்வது அவசியம். அருகில் உள்ள கோவில் கருவறையில் எரியும் தீபத்திற்கு நெய், நல்லெண்ணெய் தருவது நன்மை அளிக்கும்.
தனுசு
வீட்டை போலவே நாடு சுத்தமாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டுமென்று அக்கறை கொண்ட தனுசு ராசியினர் இந்த வாரம் புதியவர்களுடன் இணைந்து செயல்பட்டு காரிய வெற்றி அடைவர்.
தொழில்துறையிலும், வியாபாரத்திலும் தடைகள் நீங்கி திட்டமிட்ட லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பொறுமையாக செயல்பட்டு நிர்வாகத்தின் நன்மதிப்பை பெறுவது எதிர்கால நலனுக்கு ஏற்றது.
ஷேர் மார்க்கெட்டில் அரசு பங்குகளில் ஆதாயம் உண்டு. ரியல் எஸ்டேட்டில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் முதலீடு செய்யலாம். மாணவர்கள் அரசு போட்டித் தேர்வுகளில் வெல்லும் ஆலோசனை கிடைக்கப் பெறுவர்.
வயிறு, முதுகு உபாதைகள் ஏற்பட்டு விலகும். மருந்து மாத்திரை எடுத்துக் கொள்வோர் தவறாமல் எடுக்க வேண்டும். அனாதை ஆசிரமங்களுக்கு ஆடை, அன்னதானம் செய்வதன் மூலம் நன்மைகள் வந்து சேரும்.
மகரம்
காரிய வெற்றி அடைவதையே வாழ்நாள் லட்சியமாக கொண்டு தந்திரமாக செயல்படும் மகரம் ராசினர் இந்த வாரம் கடவுள் பக்தியோடு காட்சியளிப்பார்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண வரவு உண்டு.
தொழில்துறையினரும், வியாபாரிகளும் இவ்வாரம் தொழில் வெற்றி தரும் யுக்திகளை அறிந்து செயல்படுவர். அதிகார பதவியில் உள்ள உத்தியோகஸ்தர்கள் சிக்கல்களை சந்தித்து வெற்றி பெறுவர்.
ரியல் எஸ்டேட்டில் பொறுமைக்கு ஏற்ற நன்மை வந்து சேரும். ஷேர் மார்க்கெட்டில் எரிவாயு நிறுவன பங்குகளில் ஆதாயமுண்டு. மாணவர்கள் உறவினர் வீடுகளுக்கு சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பார்கள்.
மற்றவர்களால் மன உளைச்சல், உடல் சோர்வு ஏற்பட்டு வழிபாடு, மன அமைதி மூலம் விலகும். சிவப்பு நிற மலர்களை மாலை நேரங்களில் உக்கிரமான பெண் தெய்வங்களுக்கு சமர்ப்பித்து வழிபட நன்மை உண்டு.
கும்பம்
பழகுவதில் எளிமையும், செலவு செய்வதில் சிக்கனமும் உள்ள கும்பம் ராசியினருக்கு இந்த வாரம் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். நீண்ட நாள் குழப்பங்களுக்கு சில தீர்வுகள் ஏற்படும் காலகட்டம் இது.
தொழில்துறையினரும், வியாபாரிகளும் இவ்வாரம் நல்ல மாற்றங்களை செய்து முன்னேற்றப் பாதையில் நடப்பர். உத்தியோகஸ்தர்கள் பணியிட சிக்கல்கள் விலகுவதால், புதிய பாதையில் பயணம் செய்வர்.
ரியல் எஸ்டேட்டில் விளம்பரங்களால் தொழிலை விருத்தி ஏற்படும். ஷேர் மார்க்கெட்டில் மருந்து தயாரிப்பு நிறுவன பங்குகளில் லாபமுண்டு. மாணவர்கள் வெளிநாட்டு கல்வி பெறுவதற்குரிய ஆலோசனை பெறுவர்.
இருமல், காய்ச்சல், கை-கால் வலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் அகலும். இரவு முன்னதாகவே உறங்க செல்வது, மவுன விரதம் இருப்பது, முடிந்தவரை பலருக்கு அன்னதானம் அளிப்பது ஆகியவை நன்மை தரும்.
மீனம்
பிறருடைய குற்றங்களை போன்று தன்னுடைய குற்றங்களையும் அறிந்து அதை தவிர்க்க முயற்சி செய்யும் மீனம் ராசியினருக்கு இந்த வாரம் பெற்றார் உறவினர்களோடு சுமூகமான வரவு செலவு ஏற்படும்.
தொழில்துறையினர், வியாபாரிகள் புதிய கூட்டாளிகள், தொடர்புகள் கிடைத்து உற்சாகமாக செயல்படுவர். உத்தியோகஸ்தர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த நல்ல மாற்றங்களை பணியிடங்களில் சந்திப்பார்கள்.
ரியல் எஸ்டேட்டில் நீர்நிலை உள்ள பகுதியில் புதிய திட்டங்களை தொடங்குவர். ஷேர் மார்க்கெட்டில் வெளிநாட்டு பங்குகளில் ஆதாயமுண்டு. மாணவர்கள் புதிய கருத்துப்பட்டறைகள், பயிற்சிகளில் பங்கு பெறுவர்.
காலம் தவறி உணவு உண்பதால் வயிற்றுக் கோளாறு, தொண்டை வலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் அகலும். ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருள், நோட்டு புத்தகம் வாங்கி தருவதால் நன்மை ஏற்படும்.






