வார ராசிபலன் - 7.12.2025 முதல் 13.12.2025 வரை... இல்லத்திலும், உள்ளத்திலும் மகிழ்ச்சி நிலவும்

7.12.2025 முதல் 13.12.2025 வரை (கார்த்திகை 21 முதல் 27 வரை) எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி யோகம் இருக்கும்? என்பதை பார்ப்போம்.
மேஷம்
எதற்கும் யோகம் வேண்டும் என்று சொல்லும் மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் குடும்ப உறவுகளுக்குள் சுமூகமான நிலை ஏற்படும். வெளியூர் பிரயாணங்கள் மூலம் பொருளாதார வரவு உண்டு.
ஏற்றுமதி தொழில் துறையினருக்கு நல்ல லாபம் உண்டு. வியாபாரிகள் அரசு தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ரியல் எஸ்டேட்டில் உள்ளூரில் புதிய திட்டங்களை தொடங்கலாம். ஷேர் மார்க்கெட்டில் சுற்றுலாத்துறை மூலம் லாபம் உண்டு. மாணவர்கள் வெளிநாட்டு கல்விக்கான ஆலோசனைகளை பெறுவர்.
மனதில் ஒருவித அமைதியற்ற நிலையும், கை கால்களில் குடைச்சலும் ஏற்பட்டு விலகும். பொது இடங்களில் அனைவரும் பருக பாட்டில் குடிநீரை தானம் செய்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.
ரிஷபம்
தான் சிரமம் அடைந்தாலும் குடும்பத்தவர் நலனை விரும்பும் ரிஷப ராசியினருக்கு இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி நிலவும். பழைய கடன்கள் அடைபட்டு மன நிம்மதி ஏற்படும்.
தொழில்துறையினருக்கு பழைய கடன்கள் தீரும். வியாபாரிகளுக்கு வங்கிக்கடன் கேட்டபடி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் மூலம் வேலைப்பளு அதிகமாகும்.
ரியல் எஸ்டேட்டில் வர்த்தக கட்டிட திட்டப்பணிகளை தொடங்கலாம். ஷேர் மார்க்கெட்டில் இன்சூரன்ஸ், பைனான்ஸ் பங்குகளில் லாபம் கிடைக்கும். மாணவர்கள் யோகா, ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்பர்.
மன அழுத்தம் மற்றும் நரம்பு தளர்ச்சி ஆகியவற்றால் அசதி ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். வெள்ளை பசுக்களுக்கு, பசுமையான காய்கறிகளை தீனியாக கொடுப்பதால் சிக்கல்கள் விலகும்.
மிதுனம்
துணிச்சலை வெளியில் காட்டாமல் செயல்படும் மிதுனம் ராசியினருக்கு இந்த வாரம் நண்பர்கள், கூட்டாளிகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். மனதில் புதிய துணிச்சலோடு உலா வருவீர்கள்.
தொழில் துறையினருக்கு புது ஒப்பந்தங்களில் லாபம் கிடைக்கும். வியாபாரிகள் பெரும் முதலீடு செயயும் காலம் வரவில்லை. உத்தியோகஸ்தர்கள் தகவல் தொடர்புகளில் தெளிவாக செயல்படவும்.
ரியல் எஸ்டேட்டில் உடனடி முதலீடுகள் இப்போது கூடாது. ஷேர் மார்க்கெட்டில் மருத்துவத்துறை பங்குகளில் லாபம் உண்டு. மாணவர்கள் தொழில் நுட்ப, தொழில்துறை பயிற்சிகளை பெறுவர்.
வேண்டாத எண்ணங்களால் மனதில் கவலை ஏற்படும். நல்ல தூக்கம் தேவை. பெருமாள் கோவிலுக்கு நெய் தானம் செய்வது, பக்தர்களுக்கு புளிசாதம் பிரசாதம் கொடுப்பது ஆகியவை நன்மை தரும்.
கடகம்
யாருக்கும் எந்த கெடுதலும் செய்ய விரும்பாத கடக ராசியினருக்கு குழந்தைகளால் மன மகிழ்ச்சி ஏற்படும். தாய்தந்தையர் மற்றும் இல்லத் துணையுடன் உறவுகள் மேம்படும்.
தொழில் துறையில் வழக்கமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரிகள் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு விலகும்.
ரியல் எஸ்டேட்டில் சிறிய வர்த்தக கட்டிடங்களை வாங்கலாம். ஷேர் மார்க்கெட்டில் விவசாய விளைபொருள் நிறுவன பங்குகளில் லாபம் உண்டு. மாணவர்கள் புராஜெக்ட்களை வெற்றிகரமாக முடிப்பார்கள்.
கூடுதல் பணிச்சுமை காரணமாக மன உளைச்சல் மற்றும் வயிற்று கோளாறு ஏற்பட்டு விலகும். மாலை நேரங்களில் கோவில் குளம் அருகில் அமர்ந்து பிரார்த்தனை செய்வதன் மூலம் சிக்கல்கள் விலகும்.
சிம்மம்
பிரச்சினை வரும் என்றாலும் வெளிப்படையாக பேசும் வழக்கம் கொண்ட சிம்ம ராசியினருக்கு இல்லத்திலும், உள்ளத்திலும் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளால் பெருமை ஏற்படும்.
தயாரிப்பு தொழில் துறையினருக்கு இது நல்ல நேரம். வியாபாரிகள் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக கூட்டாக இணைந்து செயல்படும். இது. உத்தியோகஸ்தர்கள் சிறப்பாக செயல்படுவர்.
ரியல் எஸ்டேட்டில் குடியிருப்பு திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஷேர் மார்க்கெட்டில் திட்டமிட்டு முதலீட்டு ரிஸ்க் எடுக்கலாம். மாணவர்கள் ஆராய்ச்சி, கலை பிரிவுகளில் சிறப்பாக செயல்படுவர்.
வயிற்று கோளாறு மற்றும் தலைவலி ஆகியவை ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். இரவு நேரங்களில் துவரம் பருப்பு சாதத்தை ஏழை எளியோருக்கு அன்னதானமாக வழங்க நன்மை ஏற்படும்.
கன்னி
வானமே இடிந்தாலும் அசராமல் செயல்படும் கன்னி ராசியினருக்கு இந்த வாரம் சின்ன சின்ன குடும்ப விஷயங்கள் கூட மனதில் டென்ஷனை ஏற்படுத்தும். அதனால் மௌனம் தேவை.
கட்டிட தொழில் துறையினருக்கு இது லாபமான வாரம். வியாபாரிகளுக்கு புதிய சிக்கல்கள் ஏற்பட்டு விலகும். உத்தியோகஸ்தர்கள் புதிய பணிகளை ஏற்று செயல்பட வேண்டும்.
ரியல் எஸ்டேட்டில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஷேர் மார்க்கெட்டில் பெரு நிறுவன பங்குகளால் ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளில் கலந்து கொள்வர்.
அலைச்சல் மற்றும் மன உளைச்சல் காரணமாக மன அழுத்தம் ஏற்படும். தினமும் அதிகாலையில் அருகில் உள்ள கோவிலில் தீபமேற்றி, சிறிதுநேரம் அமர்ந்து பிரார்த்தனை செய்ய நன்மை உண்டு.
துலாம்
சிக்கல் ஏற்பட்டாலும் வழக்கமான உற்சாகத்தோடு பணிபுரியும் துலாம் ராசியினருக்கு பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டு விலகும். சரியான நேரத்தில் உறவினர்கள் நண்பர்களால் உதவி கிடைக்கும்.
தொழில்துறையினருக்கு இது நல்ல நேரம். வியாபாரிகள் புதிய திட்டங்களை செயல்படுத்தலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் திறமைக்கு சவாலாக பணிகள் வந்து சேரும்.
ரியல் எஸ்டேட்டில் சிறிய முதலீடுகளில் கவனம் செலுத்தவும். ஷேர் மார்க்கெட்டில் தகவல்தொடர்பு, சாப்ட்வேர் நிறுவன பங்குகளில் லாபமுண்டு. மாணவர்கள் வாய்மொழி தேர்வுகளில் வெற்றி பெறுவர்.
அடிக்கடி பிரயாணம் செய்வதால் பசி, தூக்கம் ஆகியவற்றில் தடைகள் ஏற்படும். பெருமாள் கோவில் தாயாருக்கு தினமும் வெள்ளை நிற மலர்களை சமர்ப்பணம் செய்தால் நன்மைகள் வந்து சேரும்.
விருச்சிகம்
திட்டமிட்டு வெற்றிப்பாதையில் நடைபோடும் விருச்சிகம் ராசியினருக்கு இந்த வாரம் எதிர்பார்த்த பொருளாதார வரவு உண்டு. அன்புக்குரியவர்களுடன் தொடர்பு ஏற்படும்.
தொழில் துறையினர் புதிய முதலீடுகளுக்காக கடன் விண்ணப்பம் செய்வார்கள். வியாபாரிகள் ஊழியர் பிரச்சனையை தீர்க்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வு பெறுவார்கள்.
ரியல் எஸ்டேட்டில் வர்த்தக கட்டுமானங்களில் முதலீடு செய்யலாம். ஷேர் மார்க்கெட்டில் நிதித்துறை பங்குகளில் ஆதாயம் கிடைக்கும். சட்டம், பொருளாதார மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெறுவர்.
தலைசுற்றல், மயக்கம் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறவும். சிவபெருமானுக்கு விபூதி அபிஷேகம் செய்வதும், முதியோர்களுக்கு காலணி தானம் செய்வதும் நன்மை தரும்.
தனுசு
நட்புக்கு மரியாதை தரும் தனுசு ராசியினருக்கு இந்த வாரம் மனதில் புதிய தெம்பு ஏற்படும். குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் அமைதியான சூழ்நிலை ஏற்படும்.
தொழில் துறையினர் தொழில் விரிவாக்கம் செய்யலாம். வியாபாரிகள் புதிய இடங்களில் கிளை தொடங்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய, கூடுதலான பணிச்சுமையை ஏற்க வேண்டும்.
ரியல் எஸ்டேட்டில் தொலைதூர முதலீடுகளை மேற்கொள்ளலாம். ஷேர் மார்க்கெட்டில் தொழில்துறை நிறுவன பங்குகளில் லாபம் உண்டு. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கும்.
காய்ச்சல், உடல் அசதி ஏற்பட்டு மருத்துவத்தால் விலகும். மஞ்சள் நிற பழங்கள் மற்றும் தானியங்களை அருகில் உள்ள கோவிலுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் சிக்கல்கள் விலகும்.
மகரம்
எப்போதும் காரியத்தில் கண்ணாக இருக்கும் மகரம் ராசியினருக்கு புதிய விஷயங்கள் தெரியும் நேரம் இது. குடும்ப பொருளாதார செலவு அதிகரிக்கும். பிறரை தேடிச் சென்று உதவி செய்வீர்கள்.
தொழில்துறையினருக்கு பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரிகளுக்கு பழைய ஒப்பந்தங்களில் லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் கூடுதல் நேரம் பணிகளை செய்ய வேண்டும்.
ரியல் எஸ்டேட்டில் புதிய திட்டங்களில் கவனம் தேவை. ஷேர் மார்க்கெட்டில் வேளாண் நிறுவன பங்குகளில் லாபமுண்டு. மாணவர்கள் சக மாணவர்களுடன் கூட்டாக படிக்க வேண்டும்.
மன உளைச்சல், தலைவலியால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மருத்துவத்தால் குணமாகும். ஆதரவற்ற முதியோர்களுக்கு பொருள் உதவி செய்வதும், மௌன விரதம் கடைபிடிப்பதும் நன்மை தரும்.
கும்பம்
திட்டமிட்டு காரிய வெற்றி பெறும் கும்ப ராசியினருக்கு இந்த வாரம் எதிர்பாராத பண வரவு உண்டு. ஒரு சிலர் தங்களுடைய பழைய ஆசிரியர்களை சந்தித்து பேசி மகிழ்வார்கள்.
தொழில் துறையினர் பொருளாதார இலக்குகளை நிர்ணயம் செய்து செயல்படலாம். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபம் பெறுவர். உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் இணைந்து வெற்றி பெறுவர்.
ரியல் எஸ்டேட்டில் வர்த்தக கட்டுமான திட்டங்கள், ஷேர் மார்க்கெட்டில் ரோபோட்டிக், சோசியல் மீடியா பங்குகளில் ஆதாயம் உண்டு. மாணவர்கள் முன்னாள் பள்ளி விழாவில் கலந்து கொள்வர்.
கால்கள் மட்டும் பாதங்களில் வலி ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். தினமும் மாலையில் வீட்டில் ஈசானிய திக்கில் நெய் தீபம் ஏற்றுவதும், பிள்ளையாருக்கு அருகம்புல் சமர்ப்பிப்பதும் நன்மை தரும்.
மீனம்
சிக்கல் வரும் முன்னரே எச்சரிக்கையாக இருக்கும் மீனம் ராசியினருக்கு இந்த வாரம் சமூக மதிப்பு உயரும். வெளி வட்டாரங்களில் தகவல் தொடர்பு மேம்படும்.
தொழில் துறையினர் எதிர்பார்த்த லாபம் அடைவர். வியாபாரிகள் வர்த்தக விரிவாக்கம் செய்யலாம். வேறு வேலையை எதிர்பார்த்த உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும்.
ரியல் எஸ்டேட்டில் நகர்ப்புற கட்டுமான திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஷேர் மார்க்கெட்டில் அரசு நிறுவன பங்குகளில் லாபமுண்டு. ஆய்வு படிப்பு மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவர்.
மற்றவர்களுடைய கருத்துக்களால் மன உளைச்சல், மன அழுத்தம் ஏற்படும். அறக்கட்டளைகள் அல்லது ஆதரவற்றோருக்கு பொருள் தானம் செய்வதால் நன்மை உண்டு.






