அக்டோபர் மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

சிம்மம், கன்னி, துலாம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான அக்டோபர் மாத பலன்களை பார்ப்போம்.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே! உங்கள் குழந்தை மனம் உங்களுடன் நெருங்கி பழகியவர்களுக்குத்தான் புரியுமே தவிர, மற்றவர்களுக்கு நீங்கள் கெடுபிடியானவர் போல்தான் தோன்றும்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் குடும்ப வருவாய் பெருகும் காலமிது. தாங்கள் நினைத்தவாறே விரும்பிய இடத்தில் தங்களுக்கு இடமாற்றத்துடன் சம்பள உயர்வும் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு
ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கோபப்படாதீர்கள். கோபப்பட்டால் தங்களின் உடல் நலம்தான் கெடும் என்பதை உணருங்கள்.
குடும்பத் தலைவிகளுக்கு
குடும்பத்தில் செலவு செய்யும் போது தாங்கள் கவனமாகவும் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்துக் கொள்ளுங்கள். உங்கள் மதிப்பு உயரும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் சில விசயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
கலைஞர்களுக்கு
கலைஞர்கள் ஒரு சிலருக்கு ஆடத் தெரியாமல் இருக்கலாம். இதனால், பல பட வாய்ப்புகள் தட்டி போய் இருக்கலாம். ஆதலால், அதற்குண்டான பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.
மாணவர்களுக்கு
மாணவர்கள் அடுத்ததடுத்த பாடப்பகுதியை சீக்கிரம் ஆசிரியர் முடிக்க இருப்பதால், தாங்கள் அன்றைய பாடங்களை அன்றே ஒருமுறையாவது படித்துவிடுவது நல்லது.
பரிகாரம்
முருகருக்கு சிவப்பு மலரால் மாலையோ அல்லது பூச்சரமோ கொடுத்து கும்பிடவும்.
கன்னி
கன்னி ராசி அன்பர்களே! எக்காலத்திலும் தீயதிற்கு துணை போகாதவர். நேர்மையுடன் வாழ்பவர் நீங்கள்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகதர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். கவனக்குறைவின்றி அதனை செய்தால் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கலாம்.
வியாபாரிகளுக்கு
வியாபாரிகளுக்கு பண நடமாட்டம் சற்றே கவலை தருமே என்றாலும் புதிய கடன்களைப் பெறாமல் ஏற்கனவே உள்ள சேமிப்புகளின் மூலம் சமாளித்துக் கொள்வீர்கள். பணியாளர்களை அரவனைத்துச் செல்லுங்கள்.
குடும்பத் தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகளுக்கு வீட்டிற்குத் தேவையான சமையலறைப் பொருட்களை வாங்கிவிடுவர். தம்பதிகளிடையே ஒற்றுமை பலப்படும்.
கலைஞர்களுக்கு
ஒரு சிலருக்கு ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும் மாதமாக அமையும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். கவலையைவிடுங்கள்.
மாணவர்களுக்கு
மாணவர்கள் ஆசிரியர்களிடம் தங்கள் சந்தேகங்களை கேட்க வெட்கப்பட வேண்டாம். அன்றன்றே சந்தேகத்தை தீர்த்துக் கொண்டால் தாங்கள் அதிக மதிப்பெண்களை பெற உதவும்.
பரிகாரம்
சிவ பெருமாளை ஞாயிற்றுகிழமை அன்று ராகுகாலத்தில் தரிசிப்பது நல்லது.
துலாம்
துலா ராசி அன்பர்களே!யார் யாரை எவ்விடத்தில் வைக்கவேண்டுமோ அந்த இடத்தில் வைத்து பழக வேண்டும என்று நன்கு உண்ர்ந்தவர் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு உத்யோகத்தில் தங்கள் வேலையில் சிறு சிக்கல்கள் ஏற்படும். அதனை அழகாக செய்து முடித்து தாங்கள் தங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர்.
வியாபாரிகளுக்கு
கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ஏனெனில் தங்களிடம் வியாபாரிகள் கடன் கேட்பார்கள் கொடுத்து விட்டு பின்பு வருந்துவதை விட கொடுப்பதை தவிர்க்கவும்.
குடும்பத் தலைவிகளுக்கு
குடும்பத்தலைவிகள் கணவன், மனைவி இணைந்து செயல்பட்டு குடும்ப நலனுக்கு பாடுபடுவர். இந்த கால கட்டத்தில் தங்களுக்கு பணப்பற்றாக்குறை ஏற்படும். ஆதலால், சிக்கன நடவடிக்கையை எடுப்பீர்கள்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு தங்கள் திறமையை அதிகரிக்க ஒரு சிலர் கூத்துப் பட்டரையில் சேருவீர்கள். தாங்கள் நினைத்த கதாபாத்திரமும் கிடைக்கும்.
மாணவர்களுக்கு
அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் படிப்பில் கவனமுடன் படித்து எழுதி பார்ப்பது மிக நல்லது. நேரத்தை வீணடிக்காமல் வெளியே சுற்றித் திரியாமல் படிப்பது தேர்வு சமயத்தில் மிகவும் சுலபமாக இருக்கும்.
பரிகாரம்
பச்சைஅம்மனுக்கு புதன் கிழமை அன்று மல்லிகை பூச்சரத்தை தரிவிப்பது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே! பெண்களிடமும் குழந்தைகளிடமும் அளவுக்கதிகமாக அன்பு காட்டுபவர் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகதர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு கடுமையான வேலையையும் தாங்கள் கண்சிமிட்டும் நேரத்தில் செய்து முடிப்பதால் தங்களுக்கு நற்பெயரும் தங்கள் வேலையை தக்க வைத்துக் கொள்ளவும் அது வழிவகுக்கும்.
வியாபாரிகளுக்கு
வியாபாரிகள் தாங்கள் செல்லும் ஊர்களில் தாங்கள் கவனக்குறைவாக இராமல் தங்கள் உடைமைகளை பாதுகாப்புடன் எடுத்துச் செல்வது நல்லது.
குடும்பத் தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகள் தங்களின் பிள்ளையின் நலனில் அக்கறை காட்டி அவர்களின் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல பாடுபடுவீர்கள். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கலைஞர்களுக்கு
கலைஞர்கள் என்றால் சினிமா மற்றும் சின்னத்திரை மாத்திரம் அல்ல மேக்கப் மேன், காஸ்ட்யூம் டிசைனர், டான்ஸ்மாஸ்டர் மற்றும் கேமரா மேன் போன்றவர்களும் அடங்குவர். அவர்களுக்கு இந்த மாதம் பணவரவுக்கு தடையில்லாமல் அமையும்.
மாணவர்களுக்கு
மாணவர்கள் தங்களுக்கு அதிக மதிப்பெண்களை பெற வேண்டுமானால் வீட்டில் அடிக்கடி எழுதி பார்ப்பது நல்லது. நன்கு படித்து இவ்வாறு எழுதி பார்த்தால் தங்களுக்கு முதல்வகுப்பில் சேருவீர்கள்.
பரிகாரம்
லஷ்மி நரசிம்மருக்கு துளசி மாலையை சனிக் அன்று சாத்தி வணங்குவது நல்லது.







