அக்டோபர் மாத ராசிபலன் - தனுசு, மகரம், கும்பம், மீனம்


அக்டோபர்  மாத ராசிபலன் - தனுசு, மகரம், கும்பம், மீனம்
x

தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கான அக்டோபர் மாத பலன்களை பார்ப்போம்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே! நீங்கள் முக அழகை நோக்காதவர். உள்ளழகை பூஜிக்கும் மனம் உள்ளவர்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு சக பணியாளர்களிடம் அனுசரித்துச் செல்வதாலும் மற்றும் தங்கள் கடமையை சரிவர செய்வதாலும் தங்கள் மேலதிகாரிகள் தங்களிடம் நெருக்கமாவர்.

வியாபாரிகளுக்கு

வியாபாரத்திற்காக வெளிநாட்டு வியாபாரத்தில் தாங்கள் ஈடுபட்டவர்களுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்ய அதிகமான ஆர்டர்கள் கிடைக்கும். அதனை குறித்த நேரத்தில் தாங்கள் அனுப்பி வைத்துவிடுவீர்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகள் சுய உதவி குழுவில் இணைந்து விடுவர். அதில் புதிய சலுகைகளை பெறுவீர்கள். வீட்டினை கலைப் பொருட்களை கொண்டு அலங்கரிப்பீர்கள்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு லொகேஷன் பார்ப்பதற்காக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். மற்ற மற்ற கதாபாத்திரம் தேர்வு செய்வதும் இந்த மாதம் நடைபெறும்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் எப்போதும் தாங்கள் எதிரிபாலினரிடத்தில் அதிக நெருக்கமாக பழக வேண்டாம். அது தங்களை பாதிக்கும். ஆதலால், தங்கள் எதிர்கால இலக்கை மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்

பைரவருக்கு செவ்வாய் கிழமை அன்று அவரது பாதத்தில் மிளகு வைத்து வழிபடுவது நல்லது.

மகரம்

மகர ராசி அன்பர்களே! உங்களை நம்பியவர்களுக்கு உதவி செய்பவர் நீங்கள். நிச்சயம் உபத்திரவம் செய்யாதவர் நீங்கள்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியர்கள் தங்கள் வேலையை பகிர்ந்து கொண்டு தங்களின் பேரன்பை பெறுவர். குடும்பமாக பழகுவார்கள்.

வியாபாரிகளுக்கு

வியாபாரம் செய்யும் இளைஞர்களுக்கு அடிக்கடி குறுகிய தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். முதலில் செலவுகள் அதிகமாக இருந்தாலும் தங்களுக்கு இனி வருங்காலத்தில் அது ஒரு அடித்தளமாக அமைந்துவிடும்.

குடும்பத் தலைவிகளுக்கு

பலகாலமாக கற்பனை செய்து வைத்துக் கொண்டிருந்த வீடு கட்டும் பணி நிறைவேறும். குடும்பத் தலைவி தங்கள் கணவரின் அன்பைப் பரிபூரணமாகப் பெற்று மனமகிழ்வு கொள்வீர்கள்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு பல காலமாக தாங்கள் பட வாய்ப்புக்காக அலைந்து திரிந்தீர்கள். அதன் வெளிப்பாடு தங்களுக்கு நல்ல கதாபாத்திரம் கிடைக்கும்

மாணவர்களுக்கு

மாணவ மாணவிகள் தங்களது சகமாணவர்களுடன் இணக்கமாக செல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதத்தில் கலந்து கொள்ள வேண்டாம். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

பரிகாரம்

ராகு பகவானுக்கு ராகு காலத்தில் வெள்ளிக் கிழமை அன்று பால் முட்டை போடுவது நல்லது.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! மற்றவர் தங்களுக்கு என்ன செய்தார்கள் என்பதை விட நாம் மற்றவர்களுக்கு என்ன செய்தோம் என்று நினைப்பவர் நீங்கள்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு உங்களுடன் வேலை பார்ப்பவர்களிடம் எந்த பாகுபாடுமின்றி இருப்பது தேவையற்ற பகையை ஒழிக்கும். ஏற்றத் தாழ்வினை பார்க்காமல் அவர்களுடன் சுமூகமாக பழகி வருவதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

வியாபாரிகளுக்கு

நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் காலமாக இந்த மாதம் தங்களுக்கு இருக்கும். வியாபாரம் சூடுபிடித்து அதில் அதிக லாபத்தினை பெறுவீர்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகள் தங்கள் கணவரின் உடல் நலனுக்காக பல விசயங்களை விட்டுக் கொடுப்பீர்கள். மாமியாரை மதித்து கணவனின் அன்பை பெறுவீர்கள். குடும்பத் தலைவிகள் வீட்டினை கலைப் பொருட்களை கொண்டு அலங்கரிப்பீர்கள்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு படம் முடிந்தும் இன்னும் திரைக்கு வராமல் இருப்பவர்களுக்கு இந்த மாதல் திரையிடும் தேதி அறிவிக்கப்படும். மேலும், புதிய வாய்ப்புகளும் கதவைத் தட்டும்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் விளையாட்டுத்தனத்தை கைவிட்டுவிட்டு தாங்கள் கல்வியில் கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். அது தங்கள் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

பரிகாரம்

சனிபகவானுக்கு சனி கிழமை சனி காயத்ரி மந்திரத்தை படித்து வணங்குவது நல்லது.

மீனம்

மீன ராசி அன்பர்களே! யாரிடமும் எதையும் யாசகம் கேட்காதவர் நீங்கள். தன்னிடம் உள்ளதை கொடுப்பவர்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகதர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு தங்களுடன் வேலை பார்க்கும் உங்கள் சக ஊழிர்களிடம் சட்டென்று சினத்தை காட்டாமல் சாந்தமாக அவர்களை அனுகுவது நல்லது.

வியாபாரிகளுக்கு

இருக்கும் தொழிலை விட்டுவிட்டு தெரியாத தொழிலில் அனுபவமின்றி செயல்படாதீர்கள். தெரிந்த தொழிலை செய்யுங்கள். ஒரு நாள் முன்னேற்றம் அடையும்.

குடும்பத் தலைவிகளுக்கு

வீட்டில் மாமியார் மருமகள் உறவுகளில் பிரச்சினை ஏற்படும் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். தங்கள் கவனத்தை மற்ற வழியான வீட்டில் இருந்து கொண்டு செய்யும் தொழில்களான டைலரிங், பொம்மை தொழில் போன்ற சுயதொழிலை ஆரம்பியுங்கள்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு படப்பிடிப்பு தாமதப்பட்டாலும் தங்களுக்கு நல்ல முக்கியமான வேடமாக அமையும். தங்களின் பெயர் சொல்லும் வகையில் அது அமையும். காத்திருப்பது தவறல்ல.

மாணவர்களுக்கு

மாணவர்கள் ஆசிரியரை கேலி கிண்டல் செய்வதை தவிர்ப்பது நல்லது. மரியாதை கொடுப்பது நல்லது. அது தங்களின் எதிர்கால கேரக்டரை நிர்ணயிக்கும்.

பரிகாரம்

திருவேற்காடு மாரியம்மனை வெள்ளிக் கிழமை அன்று தரிசிப்பது நல்லது.

1 More update

Next Story