நவம்பர் மாத ராசிபலன் - தனுசு, மகரம், கும்பம், மீனம்

தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கான நவம்பர் மாத பலன்களை பார்ப்போம்.
நவம்பர் மாதப் பலன்கள்
தனுசு
தனுசு ராசி அன்பர்களே!
எவ்வளவு இன்னல்கள் உங்களை சூழ்ந்தாலும் அதனை எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெற துடிப்பவர். இறுதியில் வெற்றி உங்களுக்கே.
சிறப்புப்பலன்கள்
உத்யோகதர்களுக்கு
நீங்கள் உயர் அதிகாரிகள் சொன்ன பணியை உடனுடக்குடன் செய்து முடித்தால் தங்களுக்கு நல்ல மரியாதையும் அவர்களின் ஆதரவும் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு
வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்பவர்கள் உங்கள் முதலீட்டுக்குத் தேவையான தொகையைப் பெற முயற்சி செய்தால் வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும்.
குடும்பத் தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகள் தங்கள் மனதை கட்டுக்குள் வைத்துக்கொண்டு ஒருநிலைப் படுத்துவது அவசியம். புதிய நபர்களை நம்பிவிடாதீர்கள்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது முழுமையாக கவனமாகப் படித்துவிட்டு கையெழுத்திடுவது நல்லது. நல்ல கதாபாத்திரம் கிடைக்கும்.
மாணவர்களுக்கு
மாணவ மாணவிகள் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்றிறாமல் அன்றாட பாடங்களை அன்றன்றே படித்து வந்தால் மட்டுமே தேர்வுகளில் வெற்றி வாகையை சூடலாம்.
பரிகாரம்
வியாழக் கிழமை அன்று மஞ்சள் மலர் மாலையை தஷிணா மூர்த்தியை அணிவித்து வழிபடுவது நல்லது.
மகரம்
மகர ராசி அன்பர்களே!
தர்மத்தில் மிகப் பற்று மிக்கவரான நீங்கள் தர்ம நெறிகளை மீறி யார் நடந்து கொண்டாலும் அதைப் பொறுத்துக் கொள்ளாமல் தட்டிக் கேட்க முற்படும் இயல்புள்ளவர்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகதர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு தங்களுடன் வேலை பார்க்கும் உங்கள் சக ஊழிர்களிடம் சட்டென்று சினத்தை காட்டாமல் சாந்தமாக அவர்களை அனுகுவது நல்லது.
வியாபாரிகளுக்கு
வியாபாரிகள் தாங்கள் செல்லும் ஊர்களில் தாங்கள் கவனக்குறைவாக இராமல் தங்கள் உடைமைகளை பாதுகாப்புடன் எடுத்துச் செல்வது நல்லது.
குடும்பத் தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகள் தங்களின் பிள்ளையின் நலனில் அக்கறை காட்டி அவர்களின் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல பாடுபடுவீர்கள். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கலைஞர்களுக்கு
கலைஞர்கள் சிலருக்கு போட்டிகளில் கலந்து கொண்டு பாராட்டுகளும், பரிசுகளும் பெறக்கூடிய வாய்ப்புண்டு. சின்னத்திரை மற்றும் சினிமாக்களிலும் வாய்ப்புகள் கிடைக்கும்.
மாணவர்களுக்கு
மாணவர்கள் தங்களுக்கு சிலருக்கு போட்டிகளில் கலந்து கொண்டு பாராட்டுகளும், பரிசுகளும் பெறக்கூடிய வாய்ப்புண்டு. அதிக மதிப்பெண்களை பெற எழுதி பார்ப்பது நல்லது.
வழிபாடு
ராகு பகவானுக்கு ராகு காலத்தில் வெள்ளிக் கிழமை அன்று பால் முட்டை போடுவது நல்லது.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே!
நீங்கள் செய்த நன்மைகளை எண்ணிப் பார்க்காமல் நன்றி மறந்து நடந்து கொள்பவர்களை எளிதில் மன்னிக்க மாட்டீர்கள். ஆனால் மன்னிப்பதே சிறந்த பண்பாகும்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகதர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு தாங்கள் பொறுமையாக இருந்து வேலைகளை நிறைவு செய்து தருவதன் மூலம் தலைமையின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
வியாபாரிகளுக்கு
வெளியூரிலும் தங்கள் பொருட்களுக்கு தேவை மிகுதிப்படும். ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புண்டு. வியாபாரம் முன்னேற்றம் அடையும்.
குடும்பத் தலைவிகளுக்கு
குடும்ப தலைவிகளுக்கு: குடும்பத்தில் அமைதி நிலவும். அதே போன்று பெரியவர்களிடம் மரியாதை செலுத்தி கணவனின் பாராட்டை அள்ளிச் செல்வீர்கள்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு கலைஞர்களுக்கு மிக நல்ல அணுகூலமான திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
மாணவர்களுக்கு
மாணவர்கள் சக மாணவர்களுடன் வம்பு, வழக்குகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் நட்புணர்வுடன் பழகி வர முயலுவது உங்கள் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள உதவும்.
பரிகாரம்
பச்சைஅம்மனுக்கு புதன் கிழமை அன்று மல்லிகை பூச்சரத்தை தரிவிப்பது நல்லது.
மீனம்
மீன ராசி அன்பர்களே!கோபம் உள்ள இடத்தில்தான் நல்ல குணம் இருக்கும் என்பது தங்களுக்குத்தான் பொருந்தும். கோபத்தைக் குறைத்துக் கொண்டால் உங்களை வெல்ல யாராலும் முடியாது.
சிறப்புப்பலன்கள்
உத்யோகதர்களுக்குசக உத்யோகஸ்தர்களின் மனம் கோணாமல் அரவணைத்துச் செல்வதன் மூலம் உயர் அதிகாரிகளின் கண்டனங்களை தவிர்த்து விடலாம்.
வியாபாரிகளுக்கு
பெரிய அளவில் கடையை அலங்கரித்து கிளைகள் துவங்கவும் இந்த மாதம் தங்களுக்கு இடம் தருகிறது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
குடும்பத் தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகளுக்கு நெடுநாட்களாக தடைபட்டு வந்த குலதெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். வீட்டிற்குத் தேவையான சமையலறைப் பொருட்களை வாங்கிவிடுவர்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும். அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும்.
மாணவர்களுக்கு
மாணவர்கள் மாணவர்கள் தேர்வு பாடத்தை கவனக்குறைவின்றி படித்தால் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கலாம். ஆசிரியர்களிடம் தங்கள் சந்தேகங்களை கேட்க வெட்கப்பட வேண்டாம்.
பரிகாரம்
சனிபகவானுக்கு சனி கிழமை சனி காயத்ரி மந்திரத்தை படித்து வணங்குவது நல்லது.






