நவம்பர் மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்


NOVEMBER Horoscope - Leo, Virgo, Libra ,Scorpio
x

சிம்மம், கன்னி, துலாம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான நவம்பர் மாத பலன்களை பார்ப்போம்.

நவம்பர் மாதப் பலன்கள்

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே!

எந்த ஒரு முயற்சியிலும் ஈடுபட்டு விடா முயற்சியுடன் செயல்பட்டு அதில் வெற்றியைக் காண கூடியவர்கள். தேசப் பக்தியும் தெய்வ பக்தியும் மிகுதியாக பெற்றிருக்கும் நீங்கள்

சிறப்புப் பலன்கள்

உத்யோகதர்களுக்கு

வேலைக்குச் செல்லும் உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் சக ஊழியர்களிடம் தங்கள் குடும்ப விசயத்தை பகிராமல் இருப்பது நல்லது. வேலைச்சுமையை நேர்த்தியாக கையாளுவீர்கள்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகள் வியாபாரிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும்.பங்குச் சந்தையால் பணம் அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பு பலப்படும்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத்தலைவிகள் நீண்ட தூர யாத்திரை மேற்கொள்வர்.அக்கம் பக்கத்தாருடன் அனுசரனையுடன் செல்லுங்கள்.தம்பதிகளிடையே மனஸ்தாபம் நேரலாம், முன்கோபத்தினை தவிர்ப்பது நல்லது.

கலைஞர்களுக்கு

கலைஞர்கள் நடன கலைஞர்கள், ஒப்பனை கலைஞர்களுக்கு அதிகமான பட கவாய்ப்புகள் கிடைக்கும். நடிகர்களுக்கும் நினைத்த வேடம் கிடைக்கும்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் பகுதி நேர வேலைகளை செய்து கொண்டு தங்கள் கைசெலவிற்கு வைத்துக் கொள்வர்.

பரிகாரம்

அங்காள அம்மனுக்கு முல்லை பூச்சரம் கொடுத்து கும்பிடவும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே!

நீங்கள் தர்ம நெறிகளை மீறி யார் நடந்து கொண்டாலும் அதைப் பொறுத்துக் கொள்ளாமல் தட்டிக் கேட்க முற்படுவீர்கள்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நீண்ட காலமாக கேட்டு வந்த கடன் உதவிகள் இப்போது கிடைத்து வீடு கட்டும் திட்டம் நிறைவேறி புது வீடு புகும் விழா மேற்கொள்வீர்கள். அது உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

வியாபாரிகளுக்கு

வியாபாரம் வியாபாரம் சார்பாக வெளியூர் அல்லது வெளிநாடு சுற்றுப்பயணம் நேரலாம். பார்க்க வேண்டிய நபர்களை சந்திப்பீர்கள். அவர்களால் தங்களுக்கு அதிக மூதலீடுகள் கிடைக்கும்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகளுக்கு வீண் வறட்டு கௌரவத்திற்காக சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டிருக்காதீர்கள். பிள்ளைகளை வளர்க்கும் போது அவர்களை அன்பையும் கண்டிப்பையும் சரிசமமாக கொடுத்து நல்ல அறிவுரைத் தருவதால் அவர்கள் நல்வழியில் செல்வர்

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு உடற்பயிற்சி மேற்கொண்டு தங்கள் உடலமைப்பை மாற்றிவிடுவீர்கள். முக்கிய வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்.

மாணவர்களுக்கு

மாணவ மாணவிகள் நன்கு படிப்பர். தங்களது பெற்றோர்களுக்கு நற்பெயர் பெற்றுத் தருவர். சுறுசுறுப்புடன் படிப்பில் அக்கறை செலுத்துவர்.

பரிகாரம்

சிவ பெருமாளை ஞாயிற்றுகிழமை அன்று ராகுகாலத்தில் தரிசிப்பது நல்லது.

துலாம்

துலா ராசி அன்பர்களே!

எழுத்தாற்றல் மிக்கவரான உங்களுக்கு, கற்பனை வளமும் மிகுதியாகவே அமைந்திருக்கும். திரை வசனக் கர்த்தா பாடலாசிரியர், பத்திரிகை ஆசிரியர் போன்ற துறைகள் ஏதேனும் ஒன்றில் புகழ் பெற்றுத் திகழ்வீர்கள்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். தங்களுக்கு அவர்கள் மூலம் இடமாற்ற முயற்சிகள் பலிக்கும். பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு

வியாபாரத்திற்காக வியாபாரிகள் புதிய முதலீடுகளைச் செய்யும் போது அவசரம் இல்லாமல், கூட்டாளிகளை அல்லது குடும்பத்தாரைக் கலந்தாலோசித்து செய்வது நல்லது.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகளுக்கு தங்கள் வீட்டில் திருமணம் மற்றும் புது வீடு குடிபுகுதல் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அத்தியாவசியத்தை மட்டும் செய்யப்பாருங்கள்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு படப்பிடிப்புக்கான இடம் பார்ப்பதற்காக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். படபிடிப்பு இந்த மாதம் துவங்கும்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் எப்போதும் தாங்கள் எதிரிபாலினரிடத்தில் அதிக நெருக்கமாக பழக வேண்டாம். அது தங்களை பாதிக்கும். ஆதலால், தங்கள் எதிர்கால இலக்கை மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்

லஷ்மி நரசிம்மருக்கு துளசி மாலையை சனிக் அன்று சாத்தி வணங்குவது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே!

உங்களுக்கு ஒரு சில நண்பர்களே இருந்தாலும் அவர்களிடம் உண்மையுடன் பழகுபவர் நீங்கள். அவர்களின் வாழ்க்கையில் யாராலும் தங்கள் நட்பை பிரிக்க முடியாது.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு உங்கள் வழக்கமான பணிகளை ஊக்கத்துடன் செய்து வாருங்கள். தலைமையில் உள்ளவர்களால் உங்களுக்குரிய மரியாதையைக் கொடுத்து வாழ்த்தி பாராட்டுவார்கள்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகள் புதிய கிளைகளை துவங்குவர். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. அரவணைத்து செல்வது நல்லது.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகள் சேமிப்பை துவங்குவர். மேலும், தங்கள் பெண் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் தங்கள் கடமையைச் செய்வர். பெண்கள் அதுவரை கடமையை உணர்ந்து நடப்பது நல்லது. உங்களுக்கு ஏற்ற மணமகன் கிடைப்பார்.

கலைஞர்களுக்கு

கலைஞர்கள் ரசிகர்களின் உற்சாக மிகுதியால் பெரிதும் மனமகிழ்ச்சி அடைவதுடன் உங்கள் பொருளாதார வசதிகளும் பெருகும்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் வெளியூர்களில் விடுதிகளில் தங்கி படிப்பவர்கள் உங்கள் நடவடிக்கைகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து வர வேண்டியது மிக அவசியம். கூடாப் பழக்க வழக்கங்களை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்

பைரவருக்கு செவ்வாய் கிழமை அன்று அவரது பாதத்தில் மிளகு வைத்து வழிபடுவது நல்லது.

1 More update

Next Story