நவம்பர் மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான நவம்பர் மாத பலன்களை பார்ப்போம்.
நவம்பர் மாதப் பலன்கள்
மேஷம்
மேஷ ராசி அன்பர்களே!
இலக்கிய பிரியவர்களாக விளங்கும் நீங்கள், இசை, கவிதை, நடனம், பாடல் போன்றவற்றில் தனித்திறமையும் ஆர்வமும் கொண்வர்களாக விளங்குவீர்கள்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு உத்யோகம் சம்பந்தமாக இடமாற்றம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.
வியாபாரிகளுக்கு
வியாபாரிகளுக்கு கடன்கள் யாவும் தீர்ந்து கைவசம் உள்ள தொகையில் சிலர் வாகனங்களை வாங்கக் கூடிய வாய்ப்பைப் பெறுவீர்கள்.
குடும்பத் தலைவிகளுக்கு
குடும்பத்தலைவிகளுக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். கர்ப்பிணிப் பெண்கள் தூரத்துப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மகான்கள், ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு தயாப்பாளர்கள் கிடைத்து தங்களுக்கு இயக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த மாதம் முயற்சி செய்வதை நிறுத்தாதிதீர்கள்.
மாணவர்களுக்கு
மாணவ, மாணவிகள் வெளிநாட்டிற்குச் சென்று படிக்க ஆர்வம் இருக்கும். அதற்குண்டான முயற்சிகளை மேற்கொள்வர். நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள்.
பரிகாரம்
முருகருக்கு சிவப்பு மலரால் மாலையோ அல்லது பூச்சரமோ கொடுத்து கும்பிடவும்.
ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே!
நீங்கள், பயணங்களை அடிக்கடி மேற்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். உங்கள் வேலைகளையும் மற்றவர்கள் எடுத்துச் செய்யும் யோகமும் தங்களுக்கு கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு
வியாபாரிகளுக்கு எந்த தொய்வும் ஏற்படாமல் மாறாக லாபமே கிடைக்கும். நிச்சயம் கீழ்நிலைக்கு செல்லாதவாறு இருக்கும். கூட்டு வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அதிக லாபம் உண்டாகும்.
குடும்பத் தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகள் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
கலைஞர்களுக்கு
ஒரு சிலர் வெளியூரிலிருந்து வந்து தாங்கள் முயற்சி செய்த திரைப்படத்தில் தங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். நல்ல கதாபாத்திரம் பெறுவீர்கள்.
மாணவர்களுக்கு
மாணவர்கள் நன்கு படிக்க வேண்டுமானால் அதிகப்படியாக எழுதிப் பார்ப்பது நல்லது. தேர்வு சமயத்தில் படிப்பதை நிறுத்திவிட்டு தற்போதிருந்தே படிப்பது நல்லது.
பரிகாரம்
லக்ஷ்மி நரசிம்ம பெருமாளை புதன் கிழமை அன்று தரிசிப்பது நல்லது.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே!
பெரும்பாலும் மற்றவரிடம் இனிமையாகவும் நாகரிகமாகவும் பேசி பழகுபவர்கள் நீங்கள் என்பதால் உங்களிடம் மனம் விட்டு பேசக் கூடிய உங்கள் நலம் விரும்பிகள் உங்களைச் சுற்றி நிறையவே இருப்பார்கள்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு
அலுவலக விசயமாக தாங்கள் வெளியூர் பயணங்கள் ஏற்படும். கூடுதல் வருவாய் பெறுவீர்கள். தங்களுக்கு பணம் தர வேண்டியவர்கள் தங்களுக்கு தானாகவே முன்வந்து கொடுப்பர்.
வியாபாரிகளுக்கு
வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அதிக லாபம் உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.
குடும்பத் தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகளுக்கு பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும். வீடு வாங்க கடன் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு ஒரு சிலருக்கு வேற்று மொழிகளில் நடிக்க அழைப்பு வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது முழுமையாக கவனமாகப் படித்துவிட்டு கையெழுத்திடுவது நல்லது.
மாணவர்களுக்கு
மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் கூடும. அதிலும் தாங்கள் கோப்பைகளை அள்ளிச் செல்வர்.
பரிகாரம்
திருவேற்காடு மாரியம்மனை வெள்ளிக் கிழமை அன்று தரிசிப்பது நல்லது.
கடகம்
கடக ராசி அன்பர்களே!
அமைதியான தோற்றமும் அலட்டிக் கொள்ளாத இயல்பான மனநிலையும் பிறரிடம் அன்பு செலுத்தக் கூடியவர் என்ற நற்பெயரையும் பெற்றவர்கள் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.. வேலையில் இருந்து வந்த தடைகள் யாவும் விலகி .மேலதிகாரிகள் தங்கள் சொல்லிற்கு மதிப்புத் தருவர்.
வியாபாரிகளுக்கு
நீங்கள் இது வரை இல்லாத நம்பிக்கை இனி வியாபாரத்தில் ஜெயிக்கும் எண்ணம் உண்டாகும். அதன்படியே தங்களுக்கு இந்த மாதம் திருப்புமுணையாக இருக்கும்.
குடும்பத் தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகள் தங்கள் கணவருடன் இணைந்து தங்கள் வருவாயினை பெருக்க திட்டமிடுவர். தங்கள் இளம் பெண் பிள்ளைகளுக்கு விரும்பியவாறே திருமணம் நடக்கும்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு படம் முடிந்தும் இன்னும் திரைக்கு வராமல் இருப்பவர்களுக்கு இந்த மாதல் திரையிடும் தேதி அறிவிக்கப்படும். மேலும், புதிய வாய்ப்புகளும் கதவைத் தட்டும்.
மாணவர்களுக்கு
மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். சோம்பேறித்தனத்தை கைவிடுவது நல்லது.
பரிகாரம்
அம்மனுக்கு வெள்ளி கிழமை அன்று மல்லிகை பூச்சரத்தை தரிவிப்பது நல்லது.






