டிசம்பர் மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

சிம்மம், கன்னி, துலாம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான டிசம்பர் மாத பலன்களை பார்ப்போம்.
டிசம்பர் மாதப் பலன்கள்
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே!
தியாகத்தின் மறுஉருவமே என்றால் அது உங்களுக்குத்தான் என்பது நன்கு தெரியும்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகதர்களுக்கு
வேலைக்குச் செல்லும் உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் மேலதிகாரிகளின் அன்பை பெற தாங்கள் குறித்த நேரத்தில் உங்கள் பணிகளை முடித்துக் காட்டினீர்கள் என்றால் அவர்கள் நட்பை பெற இயலும்.
வியாபாரிகளுக்கு
வியாபாரிகள் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் தங்களின் வியாபாரத்தை விரிவு செய்வதற்காக பயணங்கள் மேற்கொள்வர். இதனால் தங்கள் வியாபாரம் மற்ற ஊர்களிலும் செழித்து வளர இந்த பயணங்கள் சாதகமாக இருக்கும்.
குடும்பத் தலைவிகளுக்கு
குடும்பத்தலைவிகள் தங்கள் உழைப்பிற்கு வீட்டில் அங்கீகாரம் தரவில்லையே என்று ஏங்கியவர்களுக்கு இனி வீட்டில் மதிப்பு அளிப்பர். கணவரது தேவையை பூர்த்தி செய்வீர்கள்.
கலைஞர்களுக்கு
கலைஞர்கள் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லையே என்று ஏங்கியவர்கள் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று நடியுங்கள். பின்பு அதுவே, பெரிய வாய்ப்பினைப் பெற்றுத் தரும்.
மாணவர்களுக்கு
மாணவர்கள் தங்கள் சக மாணவர்களுடன் விடுமுறையில் வெளியூர் செல்ல சிறுகச் சிறுக சேர்த்து வைப்பீர்கள், படிப்பிலும் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள்.
பரிகாரம்
லக்ஷ்மி நரசிம்ம பெருமாளை புதன் கிழமை அன்று தரிசிப்பது நல்லது.
கன்னி
கன்னி ராசி அன்பர்களே!
பயணங்களால் லாபம் கிடைக்கும். வியாபார சிந்தனை உடையவர்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு சம்பளம் சரிவர வராமல் அதாவது காலம் தாழ்த்தி கொடுத்து வந்த சம்பளம் இனி மாத ஆரம்பத்திலேயே கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு
வியாபாரிகளுக்கு தேவையற்ற காலவிரையத்தை அது தவிர்க்கவும். காரணம் தங்களுக்கு அடிக்கடி மறதி வந்து போகும். தங்கள் வேலைகளை டைரியில் எழுதி வைத்துக் கொண்டு திடடமிட்டு செயல்படுங்கள்.
குடும்பத் தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகள் தாங்கள் எதிர்பார்த்தவாறு தங்களுடைய இதுவரை சேர்த்து வைத்த நகை சீட்டில் தங்களுக்கு புதிய நகை வாங்குவீர்கள். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.
கலைஞர்களுக்கு
ஒரு சிலர் தாங்கள் திரைப்படத்தில் சேருவதற்காக ஒரு தொகையை தயாப்பாளருக்கு தர முடிவெடுப்பீர்கள். இருப்பினும் அந்த திரைப்படபேனரை பற்றி நன்கு ஆராய்ந்து செய்வது நல்லது.
மாணவர்களுக்கு
மாணவர்கள் ஐ.ஏ.எஸ் படிப்புக்காக தற்போதிலிருந்தே பொது அறிவு விசயங்களை தெரிந்து கொள்வது நல்லது. மாணவர்கள் அதற்குண்டான குருப்பை தேர்வு செய்வது நல்லது.
பரிகாரம்
பைரவருக்கு செவ்வாய் கிழமை அன்று அவரது பாதத்தில் மிளகு வைத்து வழிபடுவது நல்லது.
துலாம்
துலா ராசி அன்பர்களே!
உதவுவதில் தங்களுக்கு நிகர் யாருமில்லை என்பதை வெளிக்காட்டிக்கொள்ளாதவர் நீங்கள்.
` சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் குடும்ப வருவாய் பெருகும் காலமிது. தாங்கள் நினைத்தவாறே விரும்பிய இடத்தில் தங்களுக்கு இடமாற்றத்துடன் சம்பள உயர்வும் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு
வியாபாரம் செய்யும் இளைஞர்களுக்கு அடிக்கடி குறுகிய தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். முதலில் செலவுகள் அதிகமாக இருந்தாலும் தங்களுக்கு இனி வருங்காலத்தில் அது ஒரு அடித்தளமாக அமைந்துவிடும்.
குடும்பத் தலைவிகளுக்கு
குடும்பத்தலைவிகள் கணவன், மனைவி இணைந்து செயல்பட்டு குடும்ப நலனுக்கு பாடுபடுவர். இந்த கால கட்டத்தில் தங்களுக்கு பணப்பற்றாக்குறை ஏற்படும். ஆதலால், சிக்கன நடவடிக்கையை எடுப்பீர்கள்.
கலைஞர்களுக்கு
கலைஞர்கள் ஒரு சிலருக்கு ஆடத் தெரியாமல் இருக்கலாம். இதனால், பல பட வாய்ப்புகள் தட்டி போய் இருக்கலாம். ஆதலால், அதற்குண்டான பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.
மாணவர்களுக்கு
மாணவர்கள் அடுத்ததடுத்த பாடப்பகுதியை சீக்கிரம் ஆசிரியர் முடிக்க இருப்பதால், தாங்கள் அன்றைய பாடங்களை அன்றே ஒருமுறையாவது படித்துவிடுவது நல்லது.
பரிகாரம்
சிவ பெருமாளை ஞாயிற்றுகிழமை அன்று ராகுகாலத்தில் தரிசிப்பது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே!
உங்களுக்கு நடிக்கத் தெரியாது. மற்றபடி, மற்றவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது..
சிறப்புப் பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு
மார்கெட்டிங் பிரிவில் வேலை செய்யும் உத்யோகஸ்தர்களுக்கு நீண்ட நாட்களாக தாங்கள் கேட்ட சில முக்கியமான சலுகைகள் கிடைக்கும். கவலை வேண்டாம். இந்த மாதம் மகிழ்ச்சிற்கு குறைவிருக்காது.
வியாபாரிகளுக்கு
கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ஏனெனில் தங்களிடம் வியாபாரிகள் கடன் கேட்பார்கள் கொடுத்து விட்டு பின்பு வருந்துவதை விட கொடுப்பதை தவிர்க்கவும்.
குடும்பத் தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகளுக்கு பணம் தேவைக்கேற்ப கிடைக்கும். மாமியார் மருமகள் உறவு நன்றாக இருக்கும். உறவினர், விருந்தினர் வருகை ஏற்பட்டு மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த மாதம் உங்கள் கனவு பலிக்கும்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு தாங்கள் நினைத்த கதாபாத்திரமும் கிடைக்கும். தங்கள் திறமையை அதிகரிக்க ஒரு சிலர் கூத்துப் பட்டரையில் சேருவீர்கள்.
மாணவர்களுக்கு
மாணவர்களுக்கு சோம்பேறித்தனம் குடிக்கொள்ளும். ஆதலால், தாங்கள் கூடுமானவரை சோம்பேறித்தனத்தை புறக்கணியுங்கள். படிப்பில் கவனம் செலுத்துங்கள்.
பரிகாரம்
வெக்காளி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை அன்று சர்க்கரை பொங்கல் படையல் வைத்து வழிபடுவது நல்லது.







