டிசம்பர் மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான டிசம்பர் மாத பலன்களை பார்ப்போம்.
டிசம்பர் மாதப் பலன்கள்
மேஷம்
மேஷ ராசி அன்பர்களே!
அநீதி நிகழும் போது தட்டி கேட்க தயங்காதவர். மனதில் வைத்துக் கொள்ளாது பேசுபவர் நீங்கள்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியர்கள் தங்கள் வேலையை பகிர்ந்து கொண்டு தங்களின் பேரன்பை பெறுவர். குடும்பமாக பழகுவார்கள்.
வியாபாரிகளுக்கு
ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கோபப்படாதீர்கள். கோபப்பட்டால் தங்களின் உடல் நலம்தான் கெடும் என்பதை உணருங்கள்.
குடும்பத் தலைவிகளுக்கு
குடும்பத்தில் செலவு செய்யும் போது தாங்கள் கவனமாகவும் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்துக் கொள்ளுங்கள். உங்கள் மதிப்பு உயரும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் சில விசயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு படம் முடிந்தும் இன்னும் திரைக்கு வராமல் இருப்பவர்களுக்கு இந்த மாதல் திரையிடும் தேதி அறிவிக்கப்படும். மேலும், புதிய வாய்ப்புகளும் கதவைத் தட்டும்.
மாணவர்களுக்கு
அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் படிப்பில் கவனமுடன் படித்து எழுதி பார்ப்பது மிக நல்லது. நேரத்தை வீணடிக்காமல் வெளியே சுற்றித் திரியாமல் படிப்பது தேர்வு சமயத்தில் மிகவும் சுலபமாக இருக்கும்.
பரிகாரம்
முருகருக்கு அரளி மலரால் மாலையோ அல்லது பூச்சரமோ கொடுத்து கும்பிடவும்.
ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே!
தாய் சொல்லை தட்டாதவர் என்றால் அது உங்களுக்குத்தான் பொருந்தும்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு உத்யோகத்தில் தங்கள் வேலையில் சிறு சிக்கல்கள் ஏற்படும். அதனை அழகாக செய்து முடித்து தாங்கள் தங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர்.
வியாபாரிகளுக்கு
நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் காலமாக இந்த மாதம் தங்களுக்கு இருக்கும். வியாபாரம் சூடுபிடித்து அதில் அதிக லாபத்தினை பெறுவீர்கள்.
குடும்பத் தலைவிகளுக்கு
பலகாலமாக கற்பனை செய்து வைத்துக் கொண்டிருந்த வீடு கட்டும் பணி நிறைவேறும். குடும்பத் தலைவி தங்கள் கணவரின் அன்பைப் பரிபூரணமாகப் பெற்று மனமகிழ்வு கொள்வீர்கள்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு பல காலமாக தாங்கள் பட வாய்ப்புக்காக அலைந்து திரிந்தீர்கள். அதன் வெளிப்பாடு தங்களுக்கு நல்ல கதாபாத்திரம் கிடைக்கும்
மாணவர்களுக்கு
மாணவ மாணவிகள் தங்களது சகமாணவர்களுடன் இணக்கமாக செல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதத்தில் கலந்து கொள்ள வேண்டாம். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
பரிகாரம்
அம்மனுக்கு வெள்ளி கிழமை அன்று மல்லிகை பூச்சரத்தை தரிவிப்பது நல்லது.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே!
கணக்குப் பார்த்து செலவு செய்பவர் நீங்கள். ஆடம்பர செலவை தவிர்ப்பீர்கள்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு
நீங்கள் மேல் அதிகாரிகள் சொன்ன பணியை உடனுடக்குடன் செய்து முடித்தால் தங்களுக்கு நல்ல மரியாதையும் அவர்களின் ஆதரவும் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு
வியாபாரிகளுக்கு கவலை வேண்டாம். தங்களின் சிறு தொழிலை விரிவாக்க தங்களுக்கு முதலீட்டுக்கு வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். அதற்குண்டான முயற்சியில் ஈடுபடுங்கள்.
குடும்பத் தலைவிகளுக்கு
தாங்கள் அடகு வைத்து தங்கள் கணவருக்கு தந்த கடனை இந்த மாதத்தில் ஒரு பகுதியை அடைத்து விடுவீர்கள். ஒரு சில நகைகளை மீட்டுவீர்கள்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு அடுத்த நிலை என்ற அளவிற்கு சம்பளம் கிடைக்கும். ஒரு சிலருக்கு கதாநாயகர் வாய்ப்பு அல்லது அதற்கு இணையான வாய்ப்பும் கிடைக்கும்.
மாணவர்களுக்கு
மாணவர்கள் தங்கள் சக மாணவர்களுடன் வெளியில் செல்லும் போது மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. வண்டி வாகனம் ஓட்டும்போது தாங்கள் வேகத்தை குறைப்பது நல்லது.
பரிகாரம்
அங்காள அம்மனுக்கு முல்லை பூச்சரம் கொடுத்து கும்பிடவும்.
கடகம்
கடக ராசி அன்பர்களே!
எதிரி வீட்டிற்கு வந்தாலும் அவர்களிடம் கனிவாக பழகுபவர் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களிடம் எந்த பாகுபாடுமின்றி இருப்பது தேவையற்ற பகையை ஒழிக்கும். ஏற்றத் தாழ்வினை பார்க்காமல் அவர்களுடன் சுமூகமாக பழகி வருவதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
வியாபாரிகளுக்கு
மளிகைக் கடை வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு லாபம் உயரும். வியாபாரிகள் தங்கள் கொள்முதலை பெருக்குவீர்கள். சேமிப்பும் கூடும்.
குடும்பத் தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகள் தங்கள் கணவரின் உடல் நலனுக்காக பல விசயங்களை விட்டுக் கொடுப்பீர்கள். மாமியாரை மதித்து கணவனின் அன்பை பெறுவீர்கள். குடும்பத் தலைவிகள் வீட்டினை கலைப் பொருட்களை கொண்டு அலங்கரிப்பீர்கள்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு வெளிமாநிலத்தில் இருந்து வேற்று மொழிகளில் நடிக்க அழைப்பு வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது முழுமையாக கவனமாகப் படித்துவிட்டு கையெழுத்திடுவது நல்லது.
மாணவர்களுக்கு
மாணவர்கள் விளையாட்டுத்தனத்தை கைவிட்டுவிட்டு தாங்கள் கல்வியில் கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். அது தங்கள் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
பரிகாரம்
திருவேற்காடு மாரியம்மனை வெள்ளிக் கிழமை அன்று தரிசிப்பது நல்லது.







