இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025

Update:2025-08-16 09:12 IST
Live Updates - Page 7
2025-08-16 03:55 GMT

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். அதன்படி ஆவணி மாத பூஜைக்காக கோவில் நடை இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

தந்திரி கண்டரரு மகேஸ்வரரு இன்று பொறுப்பேற்கிறார். அவரது முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். நடை திறப்பையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் மட்டும் நடைபெறும்.

2025-08-16 03:53 GMT

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை


சென்னை பசுமைவழிசாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் திருவல்லிகேணியில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2025-08-16 03:51 GMT

காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்


இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


2025-08-16 03:49 GMT

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில மாநாடு: இன்று பங்கேற்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


கனவுகள் மெய்ப்பட என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. தொடர்ந்து 'வெல்க ஜனநாயகம்' என்ற தலைப்பில் 2-வது நாளாக இன்று (சனிக்கிழமை) நடக்கும் மாநாடு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

இதற்காக அவர் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வருகிறார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.


2025-08-16 03:48 GMT

பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன்: புதின்


3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்தம் செய்யும் பேச்சுவார்த்தையானது. அமெரிக்காவின் ஆங்கரேஜ் பகுதியில் உள்ள ராணுவ படை தளத்தில் நேற்று நள்ளிரவு தொடங்கியது. இதில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் இருவரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.


2025-08-16 03:44 GMT

இன்றைய ராசிபலன் - 16.08.2025


தனுசு

புதியவர்கள் நண்பர்களாவார்கள். வாகனம், வீடு பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உயர் ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் உதவிகள் உண்டு. பழைய நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்


Tags:    

மேலும் செய்திகள்