எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
வேளாங்கண்ணி திருவிழாவின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
வேளாங்கண்ணி திருவிழாவின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க பின்வரும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
எர்ணாகுளம் சந்திப்பு - வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரெயில் (வண்டி எண். 06061) ஆகஸ்ட் 27, செப்டம்பர் 03 மற்றும் 10, 2025 ஆகிய தேதிகளில் (புதன்கிழமைகளில்) இரவு 11.50 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர விரைவு ரெயில் (வண்டி எண்: 06062) ஆகஸ்ட் 28, செப்டம்பர் 4 மற்றும் 11, 2025 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமைகளில்) மாலை 6.40 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.55 மணிக்கு எர்ணாகுளத்திற்கு சென்றடையும்.
ரெயில் பெட்டிகள் அமைப்பு: 1- ஏசி இரண்டு அடுக்கு பெட்டி, 3- ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், 8- ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 4- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 1- இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் 1- பிரேக் வேனுடன் கூடிய லக்கேஜ்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.