மக்கள் மருத்துவர் ஜெயச்சந்திரன் மனைவி ஜெ.வேணி மறைவு - அன்புமணி ராமதாஸ் இரங்கல்

மருத்துவர் ஜெயச்சந்திரனைப் போலவே அவரது மனைவியும் சேவை நோக்கம் கொண்டவர் என அன்புமணி தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-18 15:21 IST

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மக்கள் மருத்துவர் மறைந்த ஜெயச்சந்திரனின் மனைவியும், மருத்துவருவருமான ஜெ. வேணி இன்று காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

மருத்துவர் ஜெயச்சந்திரனைப் போலவே அவரது மனைவியும் சேவை நோக்கம் கொண்டவர். மருத்துவர் ஜெயச்சந்திரன் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை வழங்க அனைத்து வழிகளிலும் மருத்துவர் வேணி ஒத்துழைப்பும், ஆதரவும் அளித்தார்.

மருத்துவர் வேணியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்