கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 வட்டங்களுக்கு 20-ம் தேதி உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 வட்டங்களுக்கு 20-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-08-18 17:16 IST

குமரி,

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மகான் ஸ்ரீநாராயண குருவின் பிறந்த தினத்தை முன்னிட்டு 20.08.2025 (புதன்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு மற்றும் திருவட்டார் ஆகிய மூன்று வட்டங்களில் இயங்கும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2025 செப்டம்பர் திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (13.09.2025) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்படி மேற்படி மூன்று வட்டங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படும்.

மேற்கண்ட உள்ளூர் விடுமுறை தினமானது செலவாணி முறிச் சட்டம் 1881-இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 20.08.2025 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்