ஒயிலாட்டம் ஆடிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒயிலாட்டம் ஆடினார்.;
கோவை,
கோவை மாவட்டம் சாடிவயல் அருகே நல்லூர்வயல் மற்றும் ஆலாந்துறை புதூர் சங்கமம் கலை குழுவின் 105-வது அரங்கேற்ற விழா, நல்லூர்வயல் பகுதியில் நடந்தது. விழாவை முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
அப்போது அவரை, கலைஞர்கள் தங்களுடன் சேர்ந்து ஒயிலாட்டம் ஆடுமாறு கேட்டுக்கொண்டனர். இதை ஏற்று எஸ்.பி.வேலுமணி கலைஞர்களுடன் இணைந்து ஒயிலாட்டம் ஆடினார். முன்னதாக அவருக்கு கலைஞர்களும், ஊர் பொதுமக்களும் வரவேற்பு அளித்தனர். இதில் சங்கமம் கலை குழுவின் ஆசிரியர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.