திருமாவளவன் பிறந்தநாள் விழாவுக்காக நன்கொடை கேட்டு மிரட்டிய விசிக நிர்வாகி கைது

திருமாவளவன் பிறந்தநாள் விழாவுக்காக நன்கொடை கேட்டு மிரட்டிய விசிக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.;

Update:2025-08-18 15:36 IST

திருவள்ளூர்,

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் எஸ்.கே.குமார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

நுங்கம்பாக்கம் பகுதியில் தனியார் துப்பாக்கி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் எஸ்.கே.குமார் நன்கொடை கேட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து தொழிற்சாலை மேலாளர் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி மேற்பார்வையில் மணவாளநகர் சப்-இன்ஸ்பெக்டர் கர்ணன் வழக்குப்பதிவு செய்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் எஸ்.கே.குமாரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்