ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். அதன்படி ஆவணி மாத பூஜைக்காக கோவில் நடை இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
தந்திரி கண்டரரு மகேஸ்வரரு இன்று பொறுப்பேற்கிறார். அவரது முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். நடை திறப்பையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் மட்டும் நடைபெறும்.
Update: 2025-08-16 03:55 GMT