தேவகோட்டை புவனேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜையை முன்னிட்டு வெற்றிவேல் முனீஸ்வரன், புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.;

Update:2025-08-18 13:20 IST

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆண்டவர் செட் பகுதியில் வெற்றிவேல் முனீஸ்வரர் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல் விழா நடைபெறும். அவ்வகையில் 50-வது ஆண்டு பூச்சொரிதல் விழா, கடந்த 15-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழா நாட்களில் ஆதிபராசக்தி, மஹாலட்சுமி, அன்னபூரணி, வெள்ளிக்கவசம், மீனாட்சி, சரஸ்வதி, புவனேஸ்வரி என வெவ்வேறு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

முக்கிய நிகழ்வான திருவிளக்கு பூஜை நேற்று மாலை நடைபெற்றது. இதில் தேவகோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சிறுமிகள், பெண்கள் என 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் விளக்கு பூஜைக்கான பொருட்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக வெற்றிவேல் முனீஸ்வரன், புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது. 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலையில் பால்குட ஊர்வலம், இரவில் பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்