மோவூர் திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி மஹோத்சவ விழா
காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.;
திருவள்ளூர் அடுத்த மோவூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ தர்மராஜா ஆலயத்தில் அக்னி மஹோத்சவ விழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முதல் நாள் அம்மனுக்கு காப்பு கட்டுதலும், மறுநாள் (9-ம் தேதி) பகாசுரன் திருவிழாவும், 10-ம் தேதி திரௌபதி திருமணமும், 11-ம் தேதி சுபத்திரை திருமணமும் நடைபெற்றது. 12-ம் தேதி கரக உற்சவம், 13-ம் தேதி அர்ஜுனன் தபசு மற்றும் நாடகம் நடைபெற்றது. 14-ம் தேதி தர்மராஜா எழுந்தருளுதலும், 15-ம் தேதி அர்ஜுனன் மாடு மடக்குதலும், 16-ம் தேதி படுகளமும் நடைபெற்றது.
நேற்று மாலை 6 மணியளவில் முக்கிய நிகழ்வான அக்னி மஹோத்சவம் விமரிசையாக நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.